வேளாண் கல்வி, ஆராய்ச்சி விருது: கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
Rajinikanth: `அருமை நண்பர் ஸ்டாலின், அன்பு தம்பி விஜய்; வாழ்த்திய அனைவருக்கும்..'- நன்றி சொன்ன ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் நேற்று (12.12.2024) தனது 74வது பிறந்தநாளைக் கொண்டாடினார். முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் அனைவரது பெயரையும் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
அந்த அறிக்கையில், "என்னுடைய பிறந்தநாளன்று என்னை மனமார வாழ்த்திய என்னுடைய அருமை நண்பர் தமிழக முதலமைச்சர் மதிப்பிற்குரிய மாண்புமிகு திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்க்கட்சி தலைவர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மதிப்பிற்குரிய அன்புத்தம்பி துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், ஆந்திர முதலமைச்சர் நண்பர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்களுக்கும், மற்றும் மதிப்பிற்குரிய திரு.ஓ.பன்னீர் செல்வம், திரு.வைகோ, திருமதி.வி.கே.சசிகலா, திரு.திருநாவுக்கரசர், திரு.துரைமுருகன், திரு.அன்புமணி ராமதாஸ், திரு.டி.டி.வி.தினகரன், திரு.அண்ணாமலை, திருமதி. பிரேமலதா விஜயகாந்த், திரு.திருமாவளவன், திரு.வாசன், திரு. ஏ.சி.சண்முகம், திரு.சீமான், அன்புத்தம்பி விஜய் மற்றும் என்னை வாழ்த்திய அனைத்து மத்திய, மாநில அரசியல் நண்பர்களுக்கும்,
திரையுலகத்திலிருந்து நண்பர் திரு.கமலஹாசன், திரு.வைரமுத்து, திரு.S.P.முத்துராமன் அவர்கள், திரு.விஜயகுமார். திரு.சத்யராஜ், திரு.பாலகிருஷ்ணா, திரு.ஷாருக்கான், திரு.அமீர்கான், திரு.பார்த்திபன், திரு.தனுஷ், திரு.சிவகார்த்திகேயன் மற்றும் அநேக நடிகர், நடிகைகள் திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், நண்பர்கள், தொலைக்காட்சியினர், கிரிக்கெட் வீரர்களுக்கும் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், அனைத்து துறை சார்ந்த என்னுடைய நலவிரும்பிகளுக்கும்... நண்பர்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும், உலகெங்கும் இருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
வாழ்க தமிழ்நாடு| வளர்க தமிழ் மக்கள்!! ஜெய்ஹிந்த்!!!
உழைத்திடுவோம் மகிழ்ந்திடுவோம்" என எழுதியுள்ளார்.