செய்திகள் :

Ram Charan: 'எது பும்ரா ஃபுட்பால் ப்ளேயரா?'; வைரலான காணொளி - மன்னிப்புக் கேட்ட ராம் சரண்!

post image

ராம் சரண் நடிப்பில் உருவாகியிருக்கும் 'பெத்தி' திரைப்படம் ஜூன் 4-ம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இப்படத்தின் ஈவென்ட் சமீபத்தில் நடந்திருந்தது. இந்த நிகழ்வில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, தோனி ஆகியோர் குறித்து ஒரு வரியில் பதில் சொல்லியிருந்தார்.

ராம் சரண் - பெத்தி திரைப்படம்
ராம் சரண் - பெத்தி திரைப்படம்

அந்த வரிசையில், வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை, கால் பந்து வீரர் எனக் குறிப்பிட்டு பேசியிருந்தார். இந்தக் காணொளி இணையத்தில் வைரலாகி ட்ரால் செய்யப்பட்டது.

இந்நிலையில் ராம் சரண், மாற்றி சொன்னதற்கு மன்னிப்புக் கேட்டு அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், "எனக்குச் சில நேரங்களில் பெயர்கள் நிஜமாகவே மறந்துவிடுகிறது. ஜஸ்பிரித் பும்ரா ஜி, இந்தத் குளறுபடிகளுக்கு என்னை மன்னித்துவிடுங்கள்.

ஒட்டுமொத்தக் கூட்டத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் மத்தியில் ஏற்பட்ட ஒரு சாதாரண மனிதத் தவறுதான் இது உங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, நான் உங்கள் விளையாட்டின் மிகப்பெரிய ரசிகன்.

நீங்கள் தொடர்ந்து பேட்ஸ்மேன்களைப் திணறடிக்கும் போதெல்லாம், ஒவ்வொரு இந்தியனையும் பெருமையடையச் செய்கிறீர்கள்" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

இப்படத்தில் ஜான்வி கபூர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டோலிவுட் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

"தூக்கம் வராத நேரங்கள்ல எல்லாம் நான் ஒரு ஹாரர் படம் பார்ப்பேன்!" - பவன் கல்யாண் ஜாலி டாக்

ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரும், தெங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமுமான பவன் கல்யாண், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனக்குத் தூக்கம் வராத இரவுகளில் மனதை அமைதிப்படுத்த அவர் கையாளும் பழக்கம் குறித... மேலும் பார்க்க

"நடிகைகள் தங்களுக்கான எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்" - 'பெத்தி' விவகாரம் குறித்து நித்யா மேனன்

ராம் சரண் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'பெத்தி'. புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் ப... மேலும் பார்க்க

"சினிமாவில் பெண்களைக் காட்டும் விதம் கொடூரமானதாக இருக்கிறது" - 'பெத்தி' பட விவகாரம் குறித்து கங்கனா

ராம் சரண் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'பெத்தி'. புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் ப... மேலும் பார்க்க

Maa Inti Bangaaram: "சாய் பல்லவியை மனதில் வைத்துதான் இந்தக் கதை உருவாக்கப்பட்டது!' - பகிரும் சமந்தா

சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்ஷன் படமான 'மா இண்டி பங்காரம்' ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். கடைசியாக சமந்தா நடிப்பில் 'க... மேலும் பார்க்க

'பெத்தி' படத்தில் ஜான்வி கபூர் கதாபாத்திரம்: - பகிரங்க மன்னிப்பு கேட்ட இயக்குநர் புச்சி பாபு சனா!

ராம் சரண் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் பெத்தி. புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் பு... மேலும் பார்க்க

Peddi Review: அடையாளத்துக்காகக் களமிறங்கும் விளையாட்டு வீரன் - படமாகக் கோப்பையை வென்றதா?

அரசாங்க ஏடுகளில் எந்தவித பெயர் கொண்டும் அச்சேறாமல் இருக்கும் தன்னுடைய மலைக் கிராமத்துக்கும், அதன் காரணமாக அடையாளமற்று, அடிப்படை வசதிகளற்றுக் கிடக்கிற தன் கிராம மக்களுக்கும் தன் விளையாட்டுத் திறமையால் ... மேலும் பார்க்க