செய்திகள் :

Rohit Sharma: ``ஆஸ்திரேலியா சவாலான அணியாக இருக்க காரணம்...'' - ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ரோஹித்

post image

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பும்ரா தலைமையிலான இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தனக்கு குழந்தை பிறந்ததால் முதல் டெஸ்ட்டில் பங்கேற்காத ரோஹித் சர்மா, அடிலெய்டில் இரண்டாவது டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலியா சென்றடைந்திருக்கிறார்.

Ind vs Aus: ஜெய்ஸ்வால், பும்ரா, கோலி

2-வது டெஸ்ட் முதல் மீதமிருக்கும் போட்டிகளில் இந்திய அணியை இவரே வழிநடத்துவார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று இந்திய வீரர்களுக்குப் பிரதமர் மாளிகையில் விருந்தளித்தார். அதைத்தொடர்ந்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா உரையாற்றினார்.

அந்த உரையில் ரோஹித் சர்மா, ``விளையாட்டு மற்றும் வர்த்தகத்தில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நீண்ட உறவு உள்ளது. நாங்கள் இங்கு மகிழ்ச்சியாக கிரிக்கெட் விளையாடியிருக்கிறோம். ரசிகர்களின் ஆர்வத்தாலும், பிளேயர்ஸின் போராட்ட குணத்தாலும் ஆஸ்திரேலியா ஒரு சவாலான அணியாக இருக்கிறது. உலகின் தலைசிறந்த அணிக்கெதிராக களமிறங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. அதேசமயம் ஆஸ்திரேலியாவில் நாங்கள் வெற்றி இலக்கை அடைந்திருக்கிறோம்.

சமீபத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறோம். அந்த வேகத்தை நாங்கள் மேலும் முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்புகிறோம். மீதமுள்ள போட்டிகளில் இருநாட்டு ரசிகர்களையும் மகிழ்விப்போம். நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதை எதிர்நோக்குகிறோம். அதேசமயம் இந்த நாட்டையும் ரசிக்கிறோம். மேலும், இங்கிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களை இங்கு அழைத்ததற்கு நன்றி." என்று கூறினார்.

டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் பகல்-இரவு ஆட்டமாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Champions Trophy: `26/11 பிறகு 5 முறை இந்தியாவுக்கு வந்துவிட்டோம்!' - பிசிசிஐ விமர்சிக்கும் அப்ரிடி

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆட பாகிஸ்தானுக்கு செல்லமாட்டோம் என்பது பிசிசிஐயின் நிலைப்பாடு. தாங்கள் ஆடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் என்பது பிசிச... மேலும் பார்க்க

IPL 2025 : `ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சாதகமாக செயல்பட்டேனா?' - ரிக்கி பாண்டிங் விளக்கம்!

ஐ.பி.எல் இல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டிருக்கிறார். சமீபத்தில் முடிந்த மெகா ஏலத்தில் பஞ்சாப் அணியின் மேஜையிலும் ரிக்கி பாண்டிங் இடம்பிடித்திருந்தார். ஒரு அணி 8... மேலும் பார்க்க

AUSvIND: `கோலியை பெர்த்தில் சதம் அடிக்க விட்டிருக்கக்கூடாது!'- ஆஸியை விமர்சிக்கும் மைக்கேல் க்ளார்க்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் க்ளார்க், பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியிலேயே கோலியை சதமடிக்க விட்டிருக்கக்கூடாது என விமர்சித்திருக்கிறார்.Virat Kohliமைக்கேல் க்ளார்க் பேசுகையில்... மேலும் பார்க்க

Virat Kohli: ``அஷ்வினை நாங்கள் மிஸ் பண்ணிட்டோம்; ஆனால்..." - கோலி கேப்டன்ஸி குறித்து AB de

இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) மெகா ஏலம் நான்கு நாள்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது. ஏலத்தின் முடிவில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி எப்போதும் போல நன்றாகவே அமைந்திருக்க... மேலும் பார்க்க

CSK: 'ஏலத்தில் முறைகேடு; CSK வுக்கு மட்டும் சாதகமான அம்பையர்கள்' - குற்றம்சாட்டும் லலித் மோடி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் மீது லலித் மோடி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்தும் அதன் உ... மேலும் பார்க்க

`என் RCB ரசிகர்களுக்கு; சின்னசாமி ஸ்டேடியத்தில்...' - நெகிழ்ந்த டூ பிளெஸ்ஸி

2025 ஐபில் தொடருக்கான மெகா ஏலம் சவுதியில் நடைபெற்றது. இம்முறை நடந்த இந்த மெகா ஏலத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடைபெற்றுள்ளன.அதில் ஒன்றாக பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்து வந்த பாப் டூ ப்ளெஸ்ஸியை டெல்லி ... மேலும் பார்க்க