செய்திகள் :

Russia - Ukraine: முடிவுக்கு வருகிறதா ரஷ்யா vs உக்ரைன் போர்; பேச்சுவார்த்தைக்கு புதின் அழைப்பு!

post image

அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ (NATO) அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது போர் தொடுக்க ஆரம்பித்தது.

அதன்பிறகு, எத்தனையோ பேச்சுவார்த்தைகள், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் கண்டங்கள் ஆகியவை எதையும் பொருட்படுத்தாமல் 3 ஆண்டுகளாக நிற்காமல் உக்ரைன் மீது போர் நடத்திவருகிறது ரஷ்யா.

இந்த நிலையில்தான், போர் தொடர்பாக உக்ரைனுடன் இஸ்தான்புல்லில் மே 15-ம் தேதி நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின்.

ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போர்

இது குறித்து புதின், "மோதலுக்கான மூல காரணங்களை நீக்குவதற்கும், அமைதியை மீட்டெடுப்பதற்குமான முயற்சியாக இஸ்தான்புல்லில் உக்ரைனுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை ரஷ்யா முன்மொழிகிறது.

2022-ல் உக்ரைன்தான் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டது, ரஷ்யா அல்ல. எனவே, எந்த முன்நிபந்தனைகளும் இல்லாமல் உக்ரைன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று நாங்கள் முன்மொழிகிறோம்.

ஏற்கெனவே நடந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில், உக்ரைன் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரின் முயற்சியால் ஒரு கூட்டு வரைவு ஆவணம் தயாரிக்கப்பட்டது.

ஜெலன்ஸ்கி (உக்ரைன்) - புதின் (ரஷ்யா)
ஜெலன்ஸ்கி (உக்ரைன்) - புதின் (ரஷ்யா)

ஆனால், மேற்கத்திய நாடுகளின் வற்புறுத்தலின் பேரில், அது குப்பையில் வீசப்பட்டது என்பதை இங்கு நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். ரஷ்யா பலமுறை போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இருப்பினும், எங்களின் போர் நிறுத்த திட்டங்கள் எதற்கும் உக்ரைன் அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.

முன்பு, இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட 3 நாள்களில், 5 முறை ரஷ்ய எல்லையைத் தாக்க முயற்சிகள் மேற்கொண்டது உக்ரைன்" என்று தெரிவித்திருப்பதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, இஸ்தான்புல்லில் மே 15-ம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில் ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்த கையெழுத்தாகலாம் என்று கூறப்படுகிறது.

`பாகிஸ்தானிடமிருந்து பறிமுதல்செய்த ஆயுதங்களை எங்களிடம் கொடுங்கள்'- இந்தியாவிடம் பலுசிஸ்தான் கோரிக்கை

பலுசிஸ்தான் விடுதலை முன்னணி (BLF) தளபதி அல்லா நாசர் பலோச்சின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 30 நிமிடம் நீளும் அந்த வீடியோவில் அவர், சர்வதேச சமூகம் மற்றும் இந்திய நோக்கி பேசுகிறார்.... மேலும் பார்க்க

`அதிமுக வெட்கி தலைகுனிய வேண்டும்; யாரைக் காப்பாற்ற நினைத்தார்களோ...' - தீர்ப்பு குறித்து கனிமொழி

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை என்ற கடுமையான தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் உறுப்பி... மேலும் பார்க்க

"துணிச்சலின் உருவம்" - Ind-Pak தாக்குதலுக்குப் பின்னர் விமானப் படையினரைச் சந்தித்த மோடி |Photo Album

Modi: 'உலக நாடுகள் தலையிட பாகிஸ்தான் கெஞ்சியது; இது இடை நிறுத்தம்தான் ' - மோடி உரையின் ஹைலைட்ஸ்Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxsவணக்கம... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: "பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் என நம்புகிறேன்" - தவெக விஜய்

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது குறித்து த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "பொள்ளாச்சி பாலியல் குற... மேலும் பார்க்க

Bangladesh: ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை! - வங்கதேசத்தில் நடப்பது என்ன?

வங்காள தேசம்நாட்டில் முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு, 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தடை செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்ற... மேலும் பார்க்க

INDIA : `இந்தியாவின் பெரியண்ணனா அமெரிக்கா?’ - இந்திய அரசின் வெளியுறவில் என்ன சிக்கல்? | Depth

'தாக்குதல் நிறுத்த அறிவிப்பை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் கூறும் முன்பாகவே அமெரிக்கா வெளியிடுகிறது. இரு நாடுகள் பிரச்னையில் 'நடுநிலை’ என்ற அமெரிக்காவின் கருத்து, பல கேள்விகளை எழுப்புகிறது. மூன்ற... மேலும் பார்க்க