Salem: கடன் தொல்லையால் திமுக நிர்வாகி தற்கொலை; சேலத்தில் தலைதூக்குகிறதா கந்துவட்டி கொடுமை?
சேலம் அஸ்தம்பட்டி குருக்கள் காலனி பகுதியைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது45). இவர் அஸ்தம்பட்டியிலுள்ள சேலம் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். மேலும், தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவில் வடக்கு சட்டமன்றத் தொகுதி செயலாளராகவும் இருந்து பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று (நவம்பர் 12) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட கன்னங்குறிச்சி காவல்துறை, தனது குடும்பச் செலவுக்காக நண்பர்கள், உறவினர்கள் எனத் தெரிந்தவர்கள் எனப் பலரிடமும் விமல்ராஜ் ரூபாய் 10 லட்சம் கடன் வாங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த தொகைக்கு உரிய வட்டியைக் கட்ட முடியாமல், விமல் ராஜ் மிகவும் சிரமப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. கடந்த சில நாட்களாக விமல்ராஜ் வீட்டிற்குச் சிலர் வந்து பணத்தைத் திருப்பித் தருமாறு மிரட்டிச் சென்றதாகவும், செல்போனில் அடிக்கடி மிரட்டி வந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில் விமல்ராஜின் மனைவி ரதீனா காவல்துறையிடம் தங்களது வீட்டிற்கு 6 பேர் வந்து தொடர்ந்து தனது கணவர் விமல்ராஜ்ஜை பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும், இதனால்தான் தனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் இதனால் 6 பேரையும் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் கன்னங்குறிச்சி காவல்துறை சம்பந்தப்பட்ட 6 பேரையும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே சேலம் மாநகரப் பகுதிகளில் கந்துவட்டி கொடுமையால் பலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்த நிலையில், தற்போது தி.மு.க நிர்வாகி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY