Samantha: `Until...' - அப்பா ஜோசப்பின் மரணம்; உருக்கமாகப் பதிவிட்ட சமந்தா
தமிழ், தெலுங்கு, இந்தி எனத் தன் திரைத்திறமையை இந்தியா முழுவதும் கொண்டு சென்று தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் நடிகை சமந்தா ரூத் பிரபு.
ஆனால், சமீபத்தில் உடல் நிலை பாதிப்பு, அவரைச் சுற்றி வலம் வந்த அரசியல் சலசலப்புகள் எனத் தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். இந்த நிலையில்தான், சமந்தா நடிப்பில் வெளியான ’சிட்டாடெல்: ஹனி பனி’ வெப் சீரீஸ் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. சமீபமாகதான் அவர் சமூகவலைதளங்களில் மீண்டும் இயங்கத் தொடங்கினார்.
இதற்கிடையில், தற்போது அவரின் தந்தையும் காலமாகிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக சமந்தா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ``untill we meet again dad" எனப் பகிர்ந்திருக்கிறார்.