செய்திகள் :

Sambhal Violence: "அமைதியும் நல்லிணக்கமும் வேண்டும்" - மசூதி ஆய்வை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

post image

உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பாலில் மசூதி இருக்கும் இடத்தில் முன்னதாக இந்து கோயில் இருந்ததாக இந்து மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். விசாரணை நீதிமன்றம் இந்த மனுக்கள் அடிப்படையில் சம்பாலில் உள்ள ஷாஹி இத்கா மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டிருந்து.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று, விசாரணை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆய்வுப்பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படக் கூடாது என தீர்ப்பளித்துள்ளது.

அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுமாறு வலியுறுத்திய உச்ச நீதிமன்றம், மசூதி நிர்வாக கமிட்டி அலாகாபாத் உயர் நீதிமன்றத்தை மேல்முறையீட்டுக்கு அணுகுமாறு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் கண்ணா, "அமைதியும் நல்லிணக்கமும் உறுதிசெய்யப்பட வேண்டும். நாங்கள் இதை நிலுவையில் வைத்திருப்போம். நாங்கள் நடுநிலையுடன் இருக்கவும், விரும்பத்தகாத எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யவும் விரும்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

அலகாபாத் நீதிமன்றம் மசூதி நிர்வாக கமிட்டி மனு அளித்த மூன்று நாட்களுக்குள் விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை நீதிமன்றம் ஜனவரி 8ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ள விசாராணையை அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை நடத்தக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

Sambhal Violence: 5 பேர் மரணம், காவலர்கள் காயம்!

விசாரணை நீதிமன்ற உத்தரவு சம்பால் பகுதியில் வன்முறை வெடிக்க காரணமாக அமைந்தது. மசூதியை ஆய்வு செய்ய "அட்வகேட் கமிஷனர்" தலைமையில் ஆய்வு குழு மசூதிக்குள் நுழைந்தபோது அங்கு பொதுமக்கள் கூடியதால் சலசலப்பு ஏற்பட்டது.

மக்கள் கூடி காவல்துறையினர் மற்றும் பிற அதிகாரிகள் மசூதிக்குள் நுழைவதைத் தடுத்துள்ளனர். காவல்துறையினர் மற்றும் அங்கு கூடிய கும்பல் இடையே மோதல் எழுந்துள்ளது. மோதலில் ஈடுபட்டவர்கள் கற்களை எறிந்ததாகவும் வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது, இந்த வன்முறையில் 20 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். மோதலில் ஈடுபட்ட 5 பேர் மரணமடைந்ததாக இந்தியா டுடே தளம் தெரிவிக்கின்றது.

இதுவரை 25 பேர் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சி எம்பி ஜியா உர் ரஹ்மான் பார்க் மற்றும் உள்ளூர் எம்எல்ஏ இக்பால் மெஹ்மூத்தின் மகன் சோஹைல் இக்பால் ஆகியோரின் பெயர்களும் எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த கலவரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட நீதி விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளது உத்தரப்பிரதேசம் மாநில அரசு.

ஆய்வுக்குழுவின் அறிக்கை விசாரணை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது. அதை சீலிட்ட கவரில் வைக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. இன்று, வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறுவதனால் சம்பாலில் பாதுகாப்பு நவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Adani: அதானி விவகாரம்.. ஆட்டம் காணும் நாடாளுமன்றம்!

கடந்த 2ஆம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கூட்ட முடிவு செய்யப்பட்டிருந்தது. 'அவையைச் சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' எனவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது. ஆனால், ஒரே நாடு ஒரே ... மேலும் பார்க்க

`ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல்’– குற்றச்சாட்டுகளை அடுக்கும் எதிர்க்கட்சிகள்; முதல்வர் சொல்வதென்ன?

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் மற்றும், குமரகுருபள்ளத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு பணிகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் ந... மேலும் பார்க்க

`அரசியல் சூப்பர் ஸ்டார்' - சீறும் சீமான்; சீண்டும் வானதி; என்ன சொல்கிறார்கள்?

சென்னை, போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாடினார்.இது தொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. ... மேலும் பார்க்க

அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்: "ரத்து செய்க; மாநிலத்தின் அனுமதியின்றி..!"- மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் மீனாட்சிபுரம், அரிட்டாபட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் நடத்தியது. இதில்,... மேலும் பார்க்க

விஸ்வகர்மா திட்டம்: 'கைவினை கலைஞர்கள் வயிற்றில் அடிக்கும் ஸ்டாலின்' - கொதிக்கும் வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தையல் தொழிலை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும... மேலும் பார்க்க

சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு; சாலை ஈடுபட்ட கவுன்சிலர்கள் கைது - திருப்பூரில் நடந்தது என்ன?

திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ந.தினேஷ்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய 2 நிமிடங்களில், அதிமுக மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுக கவுன... மேலும் பார்க்க