அரையிறுதியில் அசத்திய ரஹானே (98): இறுதிப்போட்டிக்கு தேர்வானது மும்பை!
Selena Gomez : இன்ஸ்டாவில் 423 மில்லியன் பாலாவேர்ஸ்... காதலரைக் கரம்பிடிக்கும் பாடகி செலினா!
செலினா கோமஸ் ஒரு பாடகி மற்றும் நடிகை. அமெரிக்க பாப் பாடகர்களில் முக்கியமான நபர் இவர். இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் மொத்தம் 423 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். இவரின் காதலர் பென்னி பிளாங்கோ ஒரு ரெக்கார்டர், தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். எட் ஷீரன், எமினெம் மற்றும் செலினா கோமஸ் உட்பட பல கலைஞர்களுடன் பணிபுரிந்துள்ளார்.
இருவரும் டிசம்பர் 2023 முதன் முதலில் தங்கள் உறவை பற்றி தெரிவித்தனர். 2019-ல் "ஐ கேன்ட் கெட் எனஃப்" பாடலில் ஒன்றாக பணிபுரிந்தபோது, அறிமுகமாகினர்.
ரிஹானா, கால்வின் ஹாரிஸ் மற்றும் ஜஸ்டின் பீபர் போன்றவர்களுடன் பணிபுரிந்த பிளாங்கோ, மே மாதம் ட்ரூ பேரிமோர் ஷோவில் தனது காதலைப் பற்றி வெளிப்படுத்தினார்.
``அவள் நான் சந்தித்ததில் மிகவும் இனிமையானவள், மிகவும் வசீகரமானவள், மிகவும் எளிமையானவர்களில் ஒருவர். அவள் சிறந்தவள்" என்று அந்த நிகழ்ச்சியில் பிளாங்கோ கூறினார்.
செலினா கோமஸ் இன்ஸ்டாகிராமில் தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டு, "என்றென்றும் இணைந்து இருப்பதற்கான உறவு இப்போது தொடங்குகிறது" என்ற தலைப்புடன் தனது விரலில் ஒரு பெரிய நிச்சயதார்த்த மோதிரத்தைக் காட்டினார்.
இதற்கு பிளாங்கோ கமென்ட்டில், "ஏய் காத்திரு... அது என் மனைவி" என்று கூறியிருந்தார். "ஆமாம்" என்று கூறி இடது கையை அசைத்ததை ஃபேஸ்டைமில் உள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியிலும் பதிவிட்டிருந்தார். பாப் நட்சத்திரம் டெய்லர் ஸ்விஃப்ட் வாழ்த்துகளை வழங்கிய பிரபல நபர்களில் ஒருவர்.
ராப்பர் கார்டி பி, நடிகைகள் க்வினெத் பேல்ட்ரோ, ஜெனிஃபர் அனிஸ்டன் மற்றும் சுகி வாட்டர் ஹவுஸ் மற்றும் பாடகர் லில் நாஸ் எக்ஸ் ஆகியோரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
செலினா கோமஸின் நிச்சயதார்த்த பதிவை பார்த்து பிரபலங்கள் பலரும், பொதுமக்களும் செலினாவிற்கு வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.