"நடிகைகள் தங்களுக்கான எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்" - 'பெத்தி' விவகாரம் குற...
Single Parent: உங்க குழந்தை லைஃப்ஸ்டைலை மாற்றாமல் இருக்க, நீங்க வலையில் மாட்டாதீங்க|பணம் வளர்ப்போம்
நாட்டிற்கு பட்ஜெட் எவ்வளவு முக்கியமோ... அதே அளவிற்கு வீட்டிற்கும் பட்ஜெட் மிக முக்கியம். அனைத்து செலவுகளும் 'நாம்' தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற போது, சிங்கிள் பேரன்டுகளுக்கு பொறுப்பு சற்று கூடுதல்.
ஆக, குடும்பப் பட்ஜெட்டை சிங்கிள் பேரன்டுகள் எப்படி பக்காவாகவும், புத்திசாலித்தனமாகவும் பிளான் செய்ய வேண்டும் என்று கூறுகிறார் குடும்ப நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன்.

"சென்ற அத்தியாயத்தில் சொன்னது தான் இங்கேயும் - குழந்தைகளுக்கு முன்பு இருந்த அதே லைஃப்ஸ்டைலைக் கொடுக்க நினைப்பது தான் சிங்கிள் பேரன்டுகளுக்கு பெரிய மைனஸ்.
முன்பு குழந்தையை இன்டர்நேஷனல் ஸ்கூலில் படிக்க வைத்திருப்பார்கள். காரில் அழைத்துச் சென்றிருப்பார்கள். ஆனால், இப்போதைய நிதியில் அதெல்லாம் மிகக் கடினமாக இருக்கும்.
ஆனால், எப்படியாவது குழந்தைக்கு அதே லைஃப்ஸ்டைலைத் தர வேண்டும் என்று நினைத்து, அதை தொடர்ந்தால் துண்டு விழுவது என்னவோ உங்கள் பட்ஜெட்டில் தான்.
அடுத்து முக்கியமாக, சோஷியல் ஸ்டேட்டஸ் என்கிற மாயைக்குள் சிக்கிக் கொள்ளக்கூடாது.
சிங்கிள் பேரன்டுகள் இந்த இரண்டு வலைக்குள் தான் பெரியளவில் சிக்கிக் கொள்கிறார்கள். இதில் இருந்து தப்பித்தாலே மளிகை செலவு, இ.எம்.ஐ போன்றவற்றை எப்படியோ சமாளித்துக் கொள்வார்கள்.
எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால், சிங்கிள் பேரன்டுகள் சேமிப்பில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
ஒருவர் சம்பாத்தியத்தை மட்டுமே நம்பி ஓடும் ஒரு வீடு, சம்பாத்தியம் சற்று தப்பும் போது அந்த வண்டி தடுமாறும்.
அதை சமாளிக்க சேமிப்பு தான் கைக்கொடுக்கும்.
உங்கள் கையில் வருமானம் வந்துவிட்டால், 40% - 30% - 30% எனப் பிரித்துகொள்ளுங்கள்.
40 சதவிகிதம் செலவுகளுக்கு, 30 சதவிகிதம் இ.எம்.ஐக்கு, 30 சதவிகிதம் சேமிப்பிற்கு.
இ.எம்.ஐ முடிந்த உடன், அந்த 30 சதவிகிதத்தையும் சேமிப்பிற்குள் கொண்டு வந்துவிடுங்கள். இப்போது மொத்தம் 60 சதவிகிதம் உங்களது சேமிப்பின் பக்கம் ஒதுங்கிவிடும். அப்போது உங்களுக்கு நிதி பாதுகாப்பு அதிகமாகும்.
உங்களுடைய எதிர்காலம், குழந்தை உடைய எதிர்காலம் நினைத்து நீங்கள் சற்று ரிலாக்ஸ் ஆகலாம்".









.jpeg)








