செய்திகள் :

Sleeping Prince: 20 ஆண்டுகள் கோமாவில் வாழ்வு; செளதி அரேபியா இளவரசர் அல் வகீத் காலமானார்..

post image

'ஸ்லீப்பிங் பிரின்ஸ்' என்று பரவலாக அறியப்படும் செளதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் காலமாகியிருக்கிறார். கடந்த இருபது வருடங்களாக அவர் கோமா நிலையில் இருந்தார்.

ஒரு கார் விபத்தினால்தான் அவர் கோமா நிலைக்கு சென்றார். 1990-ஆம் ஆண்டு பிறந்த இளவரசர் அல்-வலீத், இளவரசர் காலித் பின் தலால் அல் சவுதின் மூத்த மகன்.

Prince Al Waheed
Prince Al Waheed

கடந்த 2005-ஆம் ஆண்டு, இவர் 15 வயதில் லண்டனில் இராணுவ மாணவராகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது ஒரு கார் விபத்தில் ஏற்பட்ட பாதிப்பில் மூளையில் கடுமையான காயம் ஏற்பட்டது.

அமெரிக்க மற்றும் ஸ்பானிஷ் மருத்துவக் குழுக்களின் தீவிர சிகிச்சையில் இருந்தபோதிலும், இளவரசர் அல்-வலீத் முழு நனவை மீண்டும் பெறவில்லை.

அவரது தந்தை, இளவரசர் காலித், உயிர் காக்கும் கருவிகளை அகற்ற வேண்டும் என்று சொன்ன விஷயங்களை மறுத்து, கடவுள் நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்.

ஆண்டுகள் செல்லச் செல்ல, இளவரசர் அல்-வலீதின் மருத்துவமனை அறை ஒரு ஆன்மீக இடமாக மாறியது. அவரது மீட்புக்காக பல பிரார்த்தனைகளும் அங்கு நடைபெற்றது.

Prince Al Waheed
Prince Al Waheed

இளவரசர் அல்-வலீதின் தந்தை தன்னுடைய எக்ஸ் வலைதளப் பக்கத்தில் துக்கத்தை வெளிப்படுத்தி, "அல்லாஹ்வின் கட்டளை மற்றும் விதியில் முழு நம்பிக்கையுடன், ஆழ்ந்த துக்கத்துடனும் வருத்தத்துடனும், எங்கள் அன்பு மகன் இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால் பின் அப்துல்அஸீஸ் அல் சவுத் இன்று அல்லாஹ்வின் கருணைக்கு சென்றுவிட்டார்" என்று பதிவிட்டிருக்கிறார்.

இளவரசர் அல்-வலீதின் இறுதிச் சடங்கு பிரார்த்தனைகள் இன்று (ஜூலை 20), ஞாயிற்றுக்கிழமை, ரியாத்தில் உள்ள இமாம் துர்கி பின் அப்துல்லாஹ் மசூதியில் நடைபெறவிருக்கிறது.

நீலகிரி: மின் கம்பத்தின் கீழ் காயங்களுடன் இறந்து கிடந்த பெண் சிறுத்தை; வனத்துறை சொல்வது என்ன?

சிறுத்தைகளின் இயற்கைக்கு மாறான இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நீலகிரி வனக்கோட்டத்தில் மேலும் ஒரு பெண் சிறுத்தையின் பரிதாப இழப்பு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்... மேலும் பார்க்க

பள்ளி சைக்கிள் ஷெட் மீது விழுந்த காலணி; எடுக்க முயன்ற மாணவன் மின்சாரம் தாக்கி பலி.. கேரளாவில் சோகம்!

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், வலியபாடத்தைச் சேர்ந்த மனு என்பவரது மகன் மிதுன்(13). தேவலக்கரை பகுதியில் உள்ள ஆண்கள் உயர்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவந்தான். நேற்று பள்ளிக்குச் சென்றபோது மாணவ... மேலும் பார்க்க

விருதுநகர்: செவல்பட்டி பட்டாசு ஆலை விபத்து; கழிவு வெடிகள் வெடித்ததில் ஒருவர் படுகாயம்; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள துலுக்கன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு வெம்பக்கோட்டை அருகில் உள்ள செவல்பட்டியில் சரவணா பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது.மாவட்ட வருவாய் அலுவ... மேலும் பார்க்க

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: ”கனவாக இருக்கக் கூடாதா..?”- கதறித் துடிக்கும் பெற்றோர்!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். 18 கு... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: "இரவில் திடீர், திடீரென விழித்துக்கொள்கிறார்" -உயிர் தப்பிய நபர் படும் அவஸ்தை

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12-ம் தேதி ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மருத்துவக் கல்லூரி வளாகக் கட்டடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில், விமானத்தில் ... மேலும் பார்க்க

திருவள்ளூர் ரயில் தீ விபத்து: "பெட்டி தடம் புரண்டதுதான் காரணமா?" - ஆட்சியர் பிரதாப் விளக்கம்

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே ஆயில் ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீப்பற்றி இருக்கிறது. தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு 60 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளனர். தீயை அணைக்கும் முயற்சி தீ... மேலும் பார்க்க