ஆ.ராசா தலைமையிலான SIR கூட்டம்; புறக்கணித்த சேகர்பாபு; புகைச்சலில் அறிவாலயம்
Spiders: தங்களுடைய வலைகளையே சாப்பிடும் சிலந்திகள்; அறிவியல் சொல்லும் காரணம் தெரியுமா?
சிலந்திகள் சிக்கலான வலைகளைப் பின்னி அதைத் தங்கள் இருப்பிடமாகவும், இரையைப் பிடிக்கும் பொறியாகவும் பயன்படுத்துகின்றன என்பது பலருக்கும் தெரியும். ஆனால், பழைய அல்லது சேதமடைந்த வலைகளை அவை உண்பது குறித்து தெரியுமா?
இந்தப் பழக்கம், சிலந்திகளை உயிர்வாழ வைப்பதற்கும் இயற்கையின் சுழற்சிக்கு உதவுவதாகவும் உள்ளது.
சிலந்தி வலைகள் பட்டுப்புரதங்களால் ஆனவை. இவை சிலந்தியின் உடலிலுள்ள சுரப்பிகளால் உருவாக்கப்படுகின்றன. ஒரு வலையை உருவாக்குவதற்கு அதிக ஆற்றலும் நேரமும் தேவைப்படுகின்றன.

வலைகள் பழையதாகி, அழுக்காகி, அல்லது பூச்சிகளைப் பிடிக்கும் திறனை இழக்கும்போது, சிலந்திகள் அதை உண்கின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் பழைய வலைகளில் உள்ள புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அவை மீண்டும் பெற்றுக்கொள்கின்றன.
பழைய வலைகளை உண்பதன் மூலம், சிலந்திகள் புதிய புரதங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மறுசுழற்சி செய்யப்பட்ட புரதங்களைப் பயன்படுத்தி புதிய வலைகளை உருவாக்குகின்றன.
இந்த ஆற்றல் சேமிப்பு முறை, உணவுப் பற்றாக்குறை உள்ள சூழல்களில் சிலந்திகள் உயிர்வாழ பெரிதும் உதவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


















