செய்திகள் :

Sri Lanka: ``தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் திருப்பி ஒப்படைக்கப்படும்" - இலங்கை அதிபர் அநுர குமார

post image
இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், 55.89 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இலங்கையின் ஒன்பதாவது அதிபராக அநுர குமார திசாநாயக்க (AKD) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அனுர குமார வெற்றி இலங்கை மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. இதுவரையில் இலங்கை பார்க்காத அரசு ஒன்றைத் தருவார் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதற்கான காரணம், அவரது மக்கள் விடுதலை முன்னணியின் இடதுசாரி சார்புநிலை. மேலும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிங்களர், ஈழத்தமிழர், தமிழ் பேசும் முஸ்லீம்கள், மலையகத்தமிழர் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவரும் இலங்கையர் என்ற பார்வையில் சமநீதிக்காகத் தனது தலைமையிலான அரசு முன் நிற்கும் என்று அநுர குமார திசாநாயக்க கூறி வருகிறார்.

அநுர குமார

இந்நிலையில் சமீபத்தில் யாழ்ப்பாணம் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், ”இலங்கை அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்” என உறுதியளித்து பேசியிருக்கிறார்.

இதுகுறித்து பேசியிருக்கும் அவர், "போரினால் பாதிக்கப்பட்ட ஜாப்னா தீவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள், தங்களிடம் இருந்து பலவந்தமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்பதற்காகப் இன்றும் போராடி வருகின்றனர். இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்.

அதிக தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதிக்குச் சொந்தமான நீர்வளங்களை தமிழக மீனவர்கள் அழிக்கின்றனர். எங்கள் அரசாங்கம், நீர்வளங்களை தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும். அத்துமீறி மீன் பிடிக்க வரும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துவோம்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Wayanad bypoll result: 5 லட்சம் வாக்குகளை கடந்த பிரியங்கா, வசமாகும் வயநாடு!

வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கிய பிரியங்கா காந்தி முதல் சுற்றிலேய முன்ன... மேலும் பார்க்க

`ரஜினியின் அழைப்பு... போயஸ் கார்டனில் சீமான்.!’ - சந்திப்பின் பின்னணி

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாக விமர்சித்துவரும் சூழலில் நடிகர் ரஜினியை சீமான் சந்தித்திருப்பதுதான் தமிழ்நாடு அரசியலில் டிரெண்டிங். ரஜினி - சீமான் சந்திப்பு பின்னணிய... மேலும் பார்க்க

'ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா வைக்க ரூ.20,000 கோடிக்கு டெண்டரா?' - ரயில்வே அமைச்சகம் சொல்வதென்ன?

ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கு இந்திய ரயில்வே 20,000 கோடி ரூபாய்க்கு டெண்டர் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. `சிசிடிவி கேமரா பொருத்த 20,000 கோடியா...' என இது தொடர்பாகப் பல்வே... மேலும் பார்க்க

`சம்பாதிக்கும் பணமெல்லாம் குடிநீர் வாங்கவே செலவாகிறது' - க.தர்மத்துப்பட்டி கிராம மக்கள் வேதனை

திண்டுக்கல் மாவட்டம், க.தர்மத்துப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. சில வருடங்களாகவே ஊராட்சி நிர்வாகம், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கான தண்ணீரினை சரியாக... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான்: இஸ்லாமுடன் முரண்படும் நூல்களுக்குத் தடை விதிக்கும் தாலிபன்கள்!

ஆப்கானிஸ்தானில் இறக்குமதி செய்யப்பட்ட புத்தகங்களை சோதனை செய்தல், தடை செய்யப்பட்ட தலைப்புகளின் கீழுள்ள புத்தகங்களை நூலகங்களிலிருந்து அகற்றுதல் மற்றும் அதன் விநியோகத்தை தடுத்தல் போன்ற இஸ்லாமுக்கு மாறான ... மேலும் பார்க்க

``சீமான் அறிவிக்கப்படாத எதிர்க்கட்சித் தலைவர்” - அதிமுகவை சீண்டும் NTK மணிசெந்தில்

``நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் விலகுவது தொடர்கதையாகிவிட்டதே... உங்கள் கட்சியில் என்ன பிரச்னை?” ``வளர்ந்துவரும் அரசியல் கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலகுவதும், இணைவதும் போன்ற சாதாரண நிகழ்வுகளை ... மேலும் பார்க்க