அருணாசலுக்கு அருகே உலகின் மிகப் பெரிய அணை: கட்டுமானத்தைத் தொடங்கிய சீனா
SRK: 'கிங்' படப்பிடிப்பு ஒத்திவைப்பு; சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் ஷாருக்கான்; பின்னணி என்ன?
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது மகள் சுஹானா கான் நடிக்கும் கிங் படத்தில் பிரதான வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் கடந்த மே மாதத்திலிருந்து தொடங்கி நடந்து வருகிறது. மும்பை படப்பிடிப்பில் ஷாருக்கான் பங்கேற்று வருகிறார்.
அவர் இடம் பெற்ற காட்சிகள் மும்பை கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோவில் நடந்து வந்தது. படப்பிடிப்பின் ஆக்ஷன் காட்சியில் ஷாருக்கான் பங்கேற்ற போது அவருக்கு காயம் ஏற்பட்டது. காயத்தின் தன்மை குறித்துத் தெரியவில்லை. ஆனால், ஒரு மாதம் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அவருக்கு தசைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக ஷாருக்கான் படப்பிடிப்பில் பங்கேற்கும் போது அடிக்கடி தசைப்பகுதியில் காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். தற்போது ஏற்பட்டுள்ள காயம் மிகவும் பெரியது கிடையாது என்றாலும், அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக அமெரிக்கா செல்ல முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில்தான் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிங் படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை கோரேகாவ் பிலிம் சிட்டியில் இருக்கும் கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோ மற்றும் ஒய்.ஆர்.எப் ஸ்டூடியோக்களை முன்பதிவு செய்து வைத்திருந்தனர்.
தற்போது ஷாருக்கான் காயம் அடைந்திருப்பதால் இந்த முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஷாருக்கானுடன் இப்படத்தில் அபிஷேக் பச்சன், ராணி முகர்ஜி, தீபிகா படுகோனே,அனில் கபூர், ஷாக்கி ஷெராப் மற்றும் சுஹானா கான் ஆகியோர் நடிக்கின்றனர்.
படம் அடுத்த ஆண்டு காந்தி ஜெயந்திக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வெளியாகும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஷாருக்கான் இப்படத்தில் ஆரம்பத்தில் சிறிய கெளரவ வேடத்தில் மட்டுமே நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டு படத்தில் ஷாருக்கானுக்குப் பிரதான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...