Once Upon a Time in Madras Review: எல்லோரிடமும் வந்து சேரும் துப்பாக்கி; நிஜமாகவ...
Stalin: `மழை பாதிப்பு; பேரிடர் நிதி; ஒரே நாடு ஒரே தேர்தல்’ - செய்தியாளர் சந்திப்பில் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவிற்கு மழை பெய்திருக்கிறது. அதற்கு ஏற்கனவே இரண்டு நாள்களாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி அதை மேற்பார்வையிடுவதற்காக இங்கிருந்து மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு, நிவாரணப் பணிகள் எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மிகப் பெரிய அளவிற்கு பாதிப்புக்கள் ஏற்பட்டதாக ஏதும் செய்தி கிடையாது. எது வந்தாலும் அதை சமாளித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்த அரசு தயாராக இருக்கிறது. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை அனுப்பி வைத்திருக்கிறோம். திருநெல்வேலிக்கு நேற்று அமைச்சர் நேரு ஏற்கனவே சென்று வந்திருக்கிறார். திருச்சி மாவட்டத்தில் மழை பெய்துள்ளதால் அங்கு வந்தவரை திருநெல்வேலியில் மறுபடியும் மழை பெய்துள்ளதால் அங்கு அனுப்பியிருக்கிறோம். பேரிடர் நிதியை மத்திய அரசிடமிருந்து தொடர்ந்து நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஊடகத்தில் இருக்கக்கூடியவர்கள் நீங்கள் எல்லாம் அதனை தொடர்ந்து எழுதினீர்கள் என்றால், அதுவே பெரிய அழுத்தமாக இருக்கும்.
நீர்த் தேக்கம், ஏரிகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதற்கு முன்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள அபாய எச்சரிக்கை வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து பொதுமக்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடத்திற்கு, பாதுகாப்பாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் " என்று கூறியிருக்கிறார். ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த ஸ்டாலின், " நேற்றே தெளிவாக அறிக்கை அளிக்கப்பட்டுவிட்டது. எங்களால் முடிந்தவரைக்கும் ஒன்று சேர்ந்து கடுமையாக எதிர்ப்போம்.” என்றார்.
கூட்டணிக் கட்சிகள் எல்லாம் சேர்ந்து மிகப் பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் திட்டம் ஏதும் இருக்கிறதா? என்று கேட்டதற்கு, "பார்ப்போம், யோசனை செய்வோம்" என்றிருக்கிறார்.