அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்: "ரத்து செய்க; மாநிலத்தின் அனுமதியின்றி..!"- மோடி...
Stress: `என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா..' -ஸ்ரெஸ்ஸை போக்க 1000 வீட்டுக் கதவுகளை உடைத்த ஆசாமி!
தற்போதைய வாழ்க்கை முறை பலரையும் மன அழுத்தத்தில் தள்ளுகிறது. குறிப்பாக அதிக நேர வேலை, தொடர்ந்து செல்போன் பயன்பாடு, தூக்கமின்மை போன்ற பல்வேறு காரணங்கள் இந்த மன அழுதத்துக்கு சொல்லப்படுகிறது. அதேபோல, நல்ல இசை, அமைதியான சூழல், பயணம், புத்தக வாசிப்பு, புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளுதல் போன்றவை மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க முடியும் என மனநல மருத்துவர்கள் ஆலோசனைக் கூறுகின்றனர்.
சிலர் இந்த மன அழுத்தத்தை குறைப்பதற்கு பல்வேறு வித்தியாசமான முறைகளை கையாள்கிறார்கள். பொருள்களை உடைப்பது, சப்தமிட்டு கத்துவது (இதற்கான சில நிறுவனங்களே செயல்படுகிறது) என வசதிக்கு ஏற்றார்போல செயல்படுத்திக்கொள்கிறார்கள்.
ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமான முறையில் மன அழுத்தத்திலிருந்து வெளிவர கடைபிடிக்கும் ஒரு செய்தி வைராலாகியிருக்கிறது. ஜப்பானின் டஜைஃபூ (Dazaifu) எனும் பகுதியில் 37 வயது நபர் ஒருவர் அத்துமீறி கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், அவர் திருடர் இல்லை என்பதும், தன் மன அழுதத்தைப் போக்குவதற்காக இப்படி வீட்டுக் கதவை உடைத்துச் சென்று, உள்ளே பார்ப்பார் என்பதும் தெரியவந்திருக்கிறது. இதுவரை அவர் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளின் கதவுகளையும், பூட்டையும் உடைத்திருக்கிறார்.
அவர் உள்ளே சென்ற வீட்டிலிருந்து எதுவும் காணாமல் போகாததால், யாரும் புகார் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இதுபோல கதவு உடைத்து உள்ளே சென்றுவிட்டு வந்ததும், அந்த வீட்டின் உரிமையாளர் யார் இதைச் செய்தது என அங்கும் இங்கும் தேடும்போது உள்ளங்கையிலிருந்து ஈரம் சுரக்கும். அது ஒருமாதிரி மகிழ்ச்சியாக இருக்கும் எனக் காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார். 'என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா...' என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...