செய்திகள் :

Surya 44: புரோமோஷன் முதல் ரிலீஸ் வரை! - 'சூர்யா 44' அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்

post image
2024-ம் ஆண்டுக்கான இந்திய சர்வதேச திரைப்பட விழா (International Film Festival of India 2024) கோவாவில் நடந்து வருகிறது.

மத்திய அரசு சார்பில், நடத்தப்படும் இந்த இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் 28ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். அந்தவகையில் கார்த்திக் சுப்புராஜும் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கிறார். இந்த விழாவில் கலந்துகொண்ட கார்த்திக் சுப்புராஜ் 'சூர்யா 44' படத்தின் அப்டேட் கொடுத்திருக்கிறார்.

'சூர்யா 44' குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த கார்த்திக் சுப்புராஜ், " சூர்யா ஒரு மிகப்பெரிய நடிகர். அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. 'சூர்யா 44' திரைப்படம் அடுத்தாண்டு சம்மரில் வெளியாகும். அதன் புரோமோஷன் நிகழ்ச்சிகள் டிசம்பர் மாதம் முதல் துவங்கும்" என்று அப்டேட் கொடுத்திருக்கிறார்.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான 'கங்குவா' திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு தியேட்டரில் வெளியான அந்த படம் கைகொடுக்காததால், ரசிகர்கள் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் பக்கம் தங்களின் எதிர்பார்ப்பை திருப்பி உள்ளனர்.

அதனால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 44-வது படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PesalamVaanga

Lokesh: "'சொர்க்கவாசல்' படம் பாத்துட்டு அதற்கு ஏற்ற மாதிரி கைதி 2-வை மாத்தணும்" - லோகேஷ் கனகராஜ்

அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில், ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சொர்க்கவாசல்'. ஸ்வைப் ரைட் ஸ்டூடியோஸ் மற்றும் திங் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்தில் செல்வரா... மேலும் பார்க்க

Emakku Thozhil Romance Review: `அரைச்ச மாவ அரைப்போமோ' - பார்த்த கதை; பழகிய திரைக்கதை; படம் எப்படி?

சினிமாவில் உதவி இயக்குநராக இருக்கும் உமாபதி (அசோக் செல்வன்), தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும் லியோவைக் (அவந்திகா) கண்டதும் காதல் வயப்படுகிறார். இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகி அந்தக் ... மேலும் பார்க்க

``வதந்திகளுக்கு தீனிப்போடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை'' - விமர்சனங்களுக்கு மோகினி டே பதில்

சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்களுக்கு அதிர்ச்சித் தரும் செய்தியாக வெளியானது அவரின் மனைவியின் விவாகரத்து அறிவிப்பு. இது தொடர்பான செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும்போதே ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணியாற்றும் ப... மேலும் பார்க்க

``மணி சாரின் அடுத்த படத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்..!'' - IFFI 2024 விழாவில் மனிஷா கொய்ராலா

2024-ம் ஆண்டுக்கான இந்திய சர்வதேச திரைப்பட விழா (International Film Festival of India 2024) கோவாவில் நடந்து வருகிறது.மத்திய அரசு சார்பில், நடத்தப்படும் இந்த இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் 28-ம... மேலும் பார்க்க

Jolly O Gymkhana Review: 'எப்பயாவது லாஜிக் இல்லனா ஓகே; எப்பவுமேவா?'- எப்படியிருக்கு ஜாலியோ ஜிம்கானா?

பவானி (மடோனா செபாஸ்டின்), அவரின் தாய் செல்லம்மா (அபிராமி), தங்கைகள் இரண்டு பேர், தாத்தா (ஒ.ஜி.மகேந்திரன்) ஆகியோர் சேர்ந்து 'வெள்ளைக்காரன் பிரியாணி' என்கிற பெயரில் கடன் வாங்கி, ஹோட்டல் தொடங்குகிறார்கள்... மேலும் பார்க்க

Amaran: "'ஹே மின்னலே' பாட்ட பாடுறதுக்கு முன்னாடி ஜி.வி என்கிட்ட சொன்னது இதான்!" - ஹரிசரண் பேட்டி

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களெங்கும் `ஹே மின்னலே' பாடலின் வாசம்தான் நிறைந்திருக்கிறது.மேஜர் முகுந்த் வரதராஜானுக்கும் இந்துவுக்கு இடையேயான பெருங்காதலை இந்த பாடல்தான் அழகாக விவரிக்கும். நம் செவிகளுக்கு மிகவும்... மேலும் பார்க்க