Heavy Rain: தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை... கரைபுரண்டோடும் வெள்ளம் ...
Udhayanidhi: "மாநிலங்களை ஒழித்துவிடும்"- 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து உதயநிதி எச்சரிப்பது என்ன?
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவுக்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று (டிசம்பர் 12) ஒப்புதல் அளித்திருக்கிறது.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு ஆயத்தமாகி இருக்கிறது. இந்நிலையில் இதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
அந்தவகையில் உதயநிதி ஸ்டாலினும் எதிர்ப்பு தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். " ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருப்பது இந்திய ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்.
மாநிலங்களின் உரிமை
ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் சர்வாதிகாரத்திற்குக் களம் அமைக்கும் சதித்திட்டம் இது. எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களை ஆளுநர் மூலம் ஆளலாம் என்கிற தந்திரமும் இதில் உள்ளது. இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைத்து, மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, கடைசியில் மாநிலங்களையே ஒழிக்கத்தான் ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ திட்டம் வழிவகுக்கும். பேராபத்தான இத்திட்டத்தை நமது கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் வலிமையுடன் எதிர்ப்போம்! மாநிலங்களைக் காப்போம்" என்று பதிவிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...