``ரயில்வே பணிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் வரணும்'' - வழிகாட்டி புத்தகம் வெளியிட்ட...
US Shutdown: 43 நாள்கள் முடங்கிய அமெரிக்க அரசு நிர்வாகம்; காரணம்-முடிவு என்ன? ட்ரம்ப் என்ன செய்தார்?
அமெரிக்க வரலாற்றிலேயே மிக நீண்ட அரசு முடக்கம் முடிவுக்கு வந்துவிட்டது.
கடந்த அக்டோபர் 1-ம் தேதி, ‘அமெரிக்க அரசு நிர்வாக முடக்கம்’ என்ற செய்தியைக் கேட்டதும், பலருக்கும் தலையும் புரிந்திருக்காது, வாலும் புரிந்திருக்காது.
என்னது அரசு நிர்வாக முடக்கமா, அது எப்படி நடக்கும்? இந்த நிலையில் அமெரிக்கா எப்படி இயங்கும்? போன்ற ஏராளமான கேள்விகளும் எழுந்திருக்கும். அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இதோ:
அரசு நிர்வாக முடக்கம் என்றால் என்ன?
அமெரிக்காவின் நிதியாண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அடுத்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.

நிதி ஒதுக்கீடு மசோதா எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு, அரசு பணியாளர்களுக்கான சம்பளம், புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு ஆகிய தகவல்களை கொண்டிருக்கும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், இந்தியாவின் 'பட்ஜெட்', அமெரிக்காவின் 'நிதி ஒதுக்கீடு மசோதா' ஆகும்.
இப்படி ஒதுக்கப்படும் நிதி குறிப்பிட்ட ஆண்டிற்கு மட்டுமே செல்லுபடியாகும். அடுத்த ஆண்டிற்கு நிச்சயம் புதிய நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.
ஒருவேளை அது நிறைவேற்றப்படவில்லை என்றால், நிதிகள் இல்லாமல் அரசு நிர்வாகம் அப்படியே முடங்கிவிடும். இதைத்தான் 'அரசு நிர்வாக முடக்கம்' (US Shutdown) என்று கூறுகிறார்கள்.
அரசு நிர்வாக முடக்கம் ஏற்படுவது எப்படி?
ஆளும் கட்சி கொண்டுவரும் நிதி ஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்க்கட்சியின் ஒப்புதல் கிடைக்காமல் போகும் பட்சத்தில் அரசு நிர்வாக முடக்கம் ஏற்படுகிறது.
அந்த மசோதாவில் இரு கட்சிகளுக்கும் ஒப்புதல் ஏற்படும் வரை இந்த முடக்கம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
தற்போது ஏன் இந்த முடக்கம்?
அமெரிக்காவில் இரண்டு கட்சிகள் தான் உள்ளன. ஒன்று, அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி. மற்றொன்று, முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி.
ஜனநாயகக் கட்சியின் பலமே மருத்துவத் துறையைச் சார்ந்த அவர்களது திட்டங்கள் ஆகும்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆட்சியில், மருத்துவக் காப்பீட்டிற்கான மானியத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதாவது, குறைந்த வருமானம் கொண்ட அமெரிக்கர்களுக்கு மருத்துவக் காப்பீட்டில் மானியம் வழங்கப்படும்.

இதை டிரம்ப் அரசு ரத்து செய்துவிட்டது. அதனால், அந்த மானியம் வரும் டிசம்பர் 31-ம் தேதி வரையே செல்லும். அதற்கு மேல் மருத்துவக் காப்பீட்டில் எந்த மானியமும் கிடைக்காது.
ஜனநாயகக் கட்சியின் வெற்றிகரமான திட்டத்தை குடியரசு கட்சி ரத்து செய்வதை அந்தக் கட்சியினர் சிறிதும் விரும்பவில்லை.
இதனால், இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்ட போது, ஜனநாயகக் கட்சியை சேர்ந்த செனட்டர்கள் அதை எதிர்த்து வாக்களித்தனர்.
பொதுவாக, நிதி ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற 60 வாக்குகள் தேவை. ஆனால், செப்டம்பர் 30-ம் தேதி இந்த மசோதா 54–44 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
நல்ல சான்ஸ்
அதிபராக பதவியேற்றதில் இருந்து ட்ரம்ப், அரசு அலுவலகங்களில் ஆட்குறைப்பு செய்ய வேண்டும்... அரசு அலுவலகங்களில் தேவையில்லாத செலவுகள் அதிகம் செய்யப்படுகின்றன என தொடர்ந்து கூறி வந்தார்.
பொதுவாக, அரசு நிர்வாக முடக்கத்தின் போது, ஆட்குறைப்பு நடக்கும். பணியில் தப்பி பிழைத்துள்ள அனைத்து அரசு பணியாளர்களுக்குமே பணி முடக்கத்தின் போதிருந்த வேலை நாள்களுக்கான சம்பளம் கிடைக்காது. இவை அனைத்தையும் ட்ரம்ப் நல்ல சான்ஸாக பார்த்தார்.
அவர் நினைத்தது போலவே, கிட்டத்தட்ட 75,000 அரசு பணியாளர்கள் எந்த ஊதியமும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான பணியாளர்கள் எந்த சம்பளமும் இல்லாமல் பணியில் இருந்தனர்.
இதனால், ட்ரம்ப் 'ஹேப்பி அண்ணாச்சி' மோடில் இருந்தார்.
அதிபராக பதவியேற்றதிலிருந்து டிரம்ப், அரசு அலுவலகங்களில் ஆட்குறைப்பு செய்ய வேண்டும்… அரசு அலுவலகங்களில் தேவையில்லாத செலவுகள் அதிகமாக நடைபெறுகின்றன என தொடர்ந்து கூறி வந்தார்.
பொதுவாக, அரசு நிர்வாக முடக்கத்தின் போது ஆட்குறைப்பு நடைபெறும். பணியில் தொடர்ந்த அனைத்து அரசு பணியாளர்களுக்கும் பணி முடக்கத்தின் போது வேலை செய்த நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படாது. இவற்றையெல்லாம் டிரம்ப் ஒரு நல்ல வாய்ப்பாகக் கண்டார்.
அவர் நினைத்தது போலவே, கிட்டத்தட்ட 75,000 அரசு பணியாளர்கள் எந்த ஊதியமும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான பணியாளர்கள் எந்த சம்பளமும் இல்லாமல் பணியில் தொடர்ந்தனர்.
இதனால், டிரம்ப் ‘ஹேப்பி அண்ணாச்சி’ மூடில் இருந்தார்.

எப்போது பிரச்னை தொடங்கியது?
முதலில் அரசு நிர்வாக முடக்கம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று தான் நினைக்கப்பட்டது. ஆனால், 10 நாள்கள், 20 நாள்கள், 25 நாள்கள், 30 நாள்கள், என அரசு நிர்வாக முடக்கம் தொடர்ந்துகொண்டே வந்தது.
இந்த முடக்கத்தால், எந்தவொரு அதிகாரப்பூர்வ தரவுகளையும் அரசால் எடுக்க முடியவில்லை. இதனால், முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய யோசித்தார்கள். மக்களிடையே அடுத்து என்ன ஆகும்... வேலைவாய்ப்பிற்கு என்ன செய்வது போன்ற கேள்விகள் எழுந்தன. அரசுக்குமே எந்தத் திட்டத்தையும் உருவாக்கவும் முடியவில்லை... செயல்படுத்தவும் முடியவில்லை.
இதனால், ஏகப்பட்ட குழப்பங்கள். கடைசியில், விமான நிலையங்களை மூடுவது வரை சென்றது.
இடையில், 14 முறை செனட் கூடியும், எந்த முடிவுமே எட்டப்படவில்லை. இருதரப்பிற்கும் சமாதனம் ஏற்படுவதாக தெரியவில்லை, இருதரப்புமே விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.
எப்படி முடிவுக்கு வந்தது?
இவை அனைத்துமே ட்ரம்ப் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால், இருதரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இறுதியில், 216 குடியரசு கட்சியினரும், 6 ஜனநாயக கட்சியினரும் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தனர். 207 ஜனநாயக கட்சியினர் ப்ளஸ் 2 சுயட்சை வேட்பாளர்களும் மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர்.
இதையடுத்து செனட்டில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அடுத்ததாக, பிரதிநிதிகளின் சபை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தது. இறுதியாக, ட்ரம்பும் மசோதாவில் கையெழுத்திட்டு விட்டார்.
அப்போதிருந்து அரசு நிர்வாகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விட்டது.
இருந்தும், மருத்துவக் காப்பீடு மானியத்திற்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை.

ட்ரம்பின் சாதனை
1980-ம் ஆண்டில் இருந்து இதுவரை 14 முறை அரசு நிர்வாக முடக்கம் நடந்துள்ளது.
அதில் 2018 - 2019 காலகட்டத்தில் முதல்முறையாக ட்ரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஏற்பட்ட அரசு நிர்வாக முடக்கம் தான் மிக நீண்ட முடக்கமாக இருந்தது. அது 35 நாள்கள் வரை நீடித்தது.
இப்போதைய முடக்கம் 43 நாள்கள் வரை நீடித்துள்ளது மிக நீண்ட அரசு முடக்கமாக பதிவாகியுள்ளது. ஆக, தன் சாதனையை தானே பிரேக் செய்துள்ளார் ட்ரம்ப்.
















