ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது
Viral Video: இரானில் இந்திய யூடியூபருக்கு உதவிய பாகிஸ்தான் இளைஞர்; வைரால் வீடியோவும் பின்னணியும்!
On Road Indian என்ற யூடியூப் சேனலை இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நடத்தி வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று Vlog வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார். இவரின் யூடியூப் சேனலில் சமீபத்தில் பகிர்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைராகியிருக்கிறது. அந்த யூடியூபர் இரான் சென்றிருக்கிறார். விமானத்திலிருந்து இறங்கியதும், அவரின் VPN வேலை செய்யவில்லை. அதனால், தான் திட்டமிட்ட பயணத்தை மேற்கொள்ள முடியாமல் போனது உட்படப் பல சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறார். VPN சரியாகுவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதை அறிந்து சிரமப்பட்டிருக்கிறார்.
அப்போது இரானில் படித்து வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹுசைன் எனும் இளைஞரிடம், தான் எதிர்கொண்டிருக்கும் சிக்கலைத் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, ஹுசைன் அந்த யூடியூபரை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பிறகு, வீட்டையே கலைத்துப்போட்டு, ஒரு சிம் கார்டை தேடி எடுத்துக் கொடுத்திருக்கிறார். அதன்பிறகே அவரின் வழமையான திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்க்கும் இந்தியர்கள் அந்தப் பாகிஸ்தானிய இளைஞர் ஹுசைனுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...