செய்திகள் :

Volkswagen: ``97% இறக்குமதி, $ 1.4 பில்லியன் வரி ஏய்ப்பு..'' -சுங்க வரித்துறை கிடுக்கிப்பிடி விசாரணை

post image

இந்தியாவில் வோக்ஸ்வாகன் கார் நிறுவனம் புனே மற்றும் ஒளரங்காபாத்தில் கார்களை தயாரித்து வருகிறது. இந்த கார்கள் தயாரிக்க வோக்ஸ்வாகன் நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ஒட்டுமொத்த உதிரி பாகங்களையும் இறக்குமதி செய்ததாக கூறி சுங்க வரித்துறை வோக்ஸ்வாகன் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

அதில் வரி விதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக முழுமையாக தயாரிக்கப்பட்ட காரை இறக்குமதி செய்யாமல் கார் தயாரிக்க தேவைப்படும் எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் உள்பட 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட உதிரி பாகங்களை இறக்குமதி செய்ததாக கூறி சுங்க வரித்துறை தனது நோட்டீஸில் குறிப்பிட்டு இருந்தது. வரி ஏய்ப்பு செய்ததற்காக 1.4 பில்லியன் டாலர் செலுத்தவேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தது. இம்மனுவை எதிர்த்து வோக்ஸ்வாகன் நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

வரி சரியாக செலுத்தப்பட்டு இருக்கிறதா என்பதை மட்டுமே சுங்க வரித்துறை பார்க்கவேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலான பிறகு எப்படி இந்த அளவு தொகையை கம்பெனியால் கொடுக்கமுடியும் என்றும் வாதிட்டார்.

சுங்க வரித்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வெங்கட்ராமன், வோக்ஸ்வாகன் நிறுவனம் தவறான தகவலின் அடிப்படையில் உதிரி பாகனங்களை இறக்குமதி செய்திருக்கிறது. ஒளரங்காபாத் தொழிற்சாலையில் எந்தமாதிரியான வேலைகள் நடக்கிறது என்ற தெளிவான விபரத்தை கம்பெனி கொடுக்கத் தவறிவிட்டது. அதோடு என்ன பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகிறது என்ற விபரத்தையும் கம்பெனி தெரிவிக்கவில்லை.

எஞ்சின், கியர் பாக்ஸ் போன்றவை ஏற்கெனவே அசம்பிள் பண்ணி இறக்குமதி செய்துள்ளனர். அதற்கு 30 சதவீதம் வரை வரி விதிக்க முடியும். வருவாய் புலனாய்வுத்துறை சமீபத்தில் நடத்திய ரெய்டில் ஒளரங்காபாத் தொழிற்சாலையில் 97 சதவீத உதிரி பாகங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு கார் தயாரிக்கப்படுவதாக அக்கம்பெனியின் நிர்வாக இயக்குனரே தெரிவித்துள்ளார். அதன் பிறகுதான் கம்பெனிக்கு வரி ஏய்ப்பு செய்ததாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் நோட்டீஸ் அனுப்ப சுங்க வரித்துறைக்கு அதிகாரம் இருக்கிறது'' என்று குறிப்பிட்டார்.

மும்பை உயர்நீதிமன்றம்

இரு தரப்பு வாதங்கள் ஒரு வாரம் நடந்தது. அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், இவ்விவகாரத்தில் தங்களால் குறிப்பிட்ட காலத்திற்குள் நோட்டீஸ் அனுப்பப்பட்டதா என்பது தொடர்பாகத்தான் முடிவு செய்ய முடியும் என்று தெரிவித்தனர். அந்த தீர்ப்பை எதிர்த்து சுங்கவரித்துறை மேல் முறையீடு செய்யலாம் என்றும் தெரிவித்தனர். விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2024: பிசினஸ் சாதனையாளர்கள் சொன்ன வெற்றிச் சூத்திரங்கள்..!

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருது 2024 நிகழ்வு பிப்ரவரி 7-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தா.மோ.அன்பரசன், தொழிலதிபர்கள் உள்பட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர... மேலும் பார்க்க

Eternal ஆக மாறிய Zomato: ``வாடிக்கையாளருடன் ஒரு உறவு வேண்டும்'' -தீபிந்தர் கோயல் சொல்லும் ஃபார்முலா!

இந்தியாவில் உணவு வர்த்தகத்தில் zomato தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ளது. குறிப்பாக தனது பிராண்டினை பொதுமக்களிடம் அடையாளப்படுத்துவதிலும் , ஞாபகப்படுத்துவதிலும் zomato சிறப்பான யுக்திகளை கையாண்டு... மேலும் பார்க்க