மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
VTV : `இந்தக் கதையை பெரிய ஹீரோவுக்காக 6 நாளில் எழுதி முடித்தேன்' - கௌதம் மேனன் பகிர்வு
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான `விண்ணைத் தாண்டி வருவாயா' படம் வெளியாகி 15 ஆண்டுகள் முடிந்திருக்கிறது. ரஜினியின் `சந்திரமுகி' சாந்தி திரையரங்கில் 800 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அப்படி ஒரு சாதனையை `விண்ணைத் தாண்டி வருவாயா' படமும் படைத்தது. ரி-ரிலீஸில் சென்னையின் பிரபல மல்டிபிளக்ஸ் ஒன்றில் 750 நாள்களைக் கடந்தும் ஓடியது. இந்தப் படம் குறித்து இயக்குநர் கௌதம் மேனன் பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில், `` விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் வெளியாகி பதினைந்து ஆண்டுகள் முடிந்திருக்கிறது. 10 ஆண்டு நிறைவடைந்தபோதே... இப்போதுவரை இதை நினைவில் வைத்திருக்கிறார்கள் என மகிழ்ந்தேன்.

ஆனால் மக்கள் இன்னும் என்னை அழைத்து படத்தைப் பார்த்ததாகக் கூறும்போது இப்போதும் மகிழ்ச்சியளிக்கிறது. மக்கள் நான் என்ன மனநிலையில் கதாபாத்திரங்களை உருவாக்கினேனோ அதே மனநிலையில் கதையை உள்வாங்கி கதாபாத்திரங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் பலர் என்னிடம் வந்து, 'நான் கார்த்திக், இது என் ஜெஸ்ஸி' என்று கூறியிருக்கிறார்கள். இது எனக்கு ஒரு அழகான படம். நான் இந்தக் கதையை ஆறு நாட்களில் எழுதி முடித்தேன். இந்தக் கதை ஒரு மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் நடிகருக்காக எழுதப்பட்டது.
அவர் ஸ்கிரிப்டைக் கேட்டதும், இதில் எந்த அதிரடி ஆக்ஷனும் இல்லை. இதை எப்படிச் செய்வது்... இது எனக்கு செட் ஆகாது... எனக் கூறி புறக்கணித்தார். அதன்பிறகுதான் நான் அதை நேரடியாக சிம்புவிடம் கொண்டு சென்றறேன். சிம்பு இந்தப் படத்துக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்ட விதமும், அவர் நடித்த விதமும் மிகவும் அற்புதமானது. அந்தப் படம் எடுக்கப்பட்ட முழு நிகழ்வும் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது." என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
