Wayanad By-poll: மெகா முன்னிலையில் பிரியங்கா காந்தி - வயநாடு இடைத்தேர்தல் அப்டேட்!
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி நடைபெற்றது.
இதில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளும், பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகப் பதவியேற்றதால், வயநாடு தொகுதி எம்.பி. பதவியிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து, வயநாடு தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டு, நவ.13ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. ராகுல் காந்தி ராஜினாமா செய்த வயநாடு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அவரது சகோதரி பிரியங்கா காந்தி களமிறங்கி இருந்தார்.
வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மொகேரி, பா.ஜ.க. சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்டோர் போட்டியிட்டிருந்தனர். இந்நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது.
தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி வயநாட்டில்... காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது.
காங்கிரஸ் - 7011 வாக்குகள்
சிபிஐ - 85 வாக்குகள்
பாஜக - 54 வாக்குகள்