செய்திகள் :

Wayanad By-poll: மெகா முன்னிலையில் பிரியங்கா காந்தி - வயநாடு இடைத்தேர்தல் அப்டேட்!

post image
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி நடைபெற்றது.

இதில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளும், பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி

அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகப் பதவியேற்றதால், வயநாடு தொகுதி எம்.பி. பதவியிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து, வயநாடு தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டு, நவ.13ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. ராகுல் காந்தி ராஜினாமா செய்த வயநாடு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அவரது சகோதரி பிரியங்கா காந்தி களமிறங்கி இருந்தார்.

வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மொகேரி, பா.ஜ.க. சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்டோர் போட்டியிட்டிருந்தனர். இந்நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது.

பிரியங்கா காந்தி

தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி வயநாட்டில்... காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது.

காங்கிரஸ் - 7011 வாக்குகள்

சிபிஐ - 85 வாக்குகள்

பாஜக - 54 வாக்குகள்

Maharashtra: ``தேர்தல் முடிவை ஏற்க முடியாது; ஏதோ சதி நடந்திருக்கிறது” - தாக்கரே கட்சி புகார்

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்கு சதவீதம் அதிகமாக இருந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டபோது பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டு... மேலும் பார்க்க

Maharashtra: கைகொடுத்த பெண்கள் வாக்கு; ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் பாஜக கூட்டணி - முதல்வர் யார்?

மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு கடந்த 20-ம் நடந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இத்தேர்தலில் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பிரதானப்படுத்தி பா.ஜ.க தலைம... மேலும் பார்க்க

``இங்கிலாந்து வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" - நெதன்யாகு பிடிவாரண்ட் குறித்து இங்கிலாந்து

கடந்த ஆண்டு முதல் பாலஸ்தீனத்துக்கும் - இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போரில் இதுவரை காஸாவில் மட்டும் பெண்கள், குழந்தைகள் உள்பட 44,000 பேர் உயிரிழந்துள்ளனர். லெபனான் உயிர்ழப்புகள் 3,500-ஐ கடந்துள்ளது... மேலும் பார்க்க

மருத்துவமனை, பள்ளி, நீதிமன்றம்; எங்கேதான் இருக்கிறது உயிர் பாதுகாப்பு? - சாடும் எதிர்க்கட்சிகள்

அதிகரிக்கும் குற்றங்கள்:தமிழகத்தில் பட்டப்பகலில் கொலைகள் நடக்காத நாளே இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒர... மேலும் பார்க்க

சூடுபிடிக்கும் மதுரை டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் - ‘டபுள் கேம்’ ஆடுவது தமிழக அரசா, மத்திய அரசா?

புதிய சுரங்கம்!மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை ஒட்டி புதிதாக டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டு, அதனை ஒரு தனியார் நிறுவனம் ஏலம் எடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இந்த செய்திகள் வெளியா... மேலும் பார்க்க

Wayanad Byelection: 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் முந்துவாரா பிரியங்கா? - காங்கிரஸின் திட்டமென்ன?

வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 23) காலை தொடங்கியிருக்கிறது. இந்திய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் ஜவஹர்லால் நேரு குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்கா காந்தி... மேலும் பார்க்க