செய்திகள் :

Wayanad bypoll result: 5 லட்சம் வாக்குகளை கடந்த பிரியங்கா, வசமாகும் வயநாடு!

post image

வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கிய பிரியங்கா காந்தி முதல் சுற்றிலேய முன்னிலை பெறத் தொடங்கினார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் தொடர்ந்து முன்னேறி 5 லட்சம் வாக்குகளைக் கடந்து முன்னிலையில் இருக்கிறார்.

வயநாடு காங்கிரஸ்

காங்கிரஸின் கை ஓங்குவதைக் காண அக்கட்சியின் தொண்டர்களும் நிர்வாகிகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்பெட்டா பகுதியில் திரண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 2019 மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி பெற்ற வாக்குகளை விட பிரியங்கா காந்தி அதிகம் பெற்று சாதனை படைப்பாரா என்று எதிர்பார்ப்பு கட்சியினரிடையே மேலோங்கி இருக்கிறது. இரண்டாவது இடத்தில் ஆளும் இடது முன்னணி வேட்பாளர் சத்யன் மொகேரியும் மூன்றாவது இடத்தில் பா.ஜ‌க வேட்பாளர் நவ்யா ஹரிதாஸும் உள்ளனர். இன்னும் சில சுற்று எண்ணிக்கையில் இறுதி முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இனிப்புகளை வழங்கியும் பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

`ரஜினியின் அழைப்பு... போயஸ் கார்டனில் சீமான்.!’ - சந்திப்பின் பின்னணி

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாக விமர்சித்துவரும் சூழலில் நடிகர் ரஜினியை சீமான் சந்தித்திருப்பதுதான் தமிழ்நாடு அரசியலில் டிரெண்டிங். ரஜினி - சீமான் சந்திப்பு பின்னணிய... மேலும் பார்க்க

'ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா வைக்க ரூ.20,000 கோடிக்கு டெண்டரா?' - ரயில்வே அமைச்சகம் சொல்வதென்ன?

ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கு இந்திய ரயில்வே 20,000 கோடி ரூபாய்க்கு டெண்டர் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. `சிசிடிவி கேமரா பொருத்த 20,000 கோடியா...' என இது தொடர்பாகப் பல்வே... மேலும் பார்க்க

`சம்பாதிக்கும் பணமெல்லாம் குடிநீர் வாங்கவே செலவாகிறது' - க.தர்மத்துப்பட்டி கிராம மக்கள் வேதனை

திண்டுக்கல் மாவட்டம், க.தர்மத்துப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. சில வருடங்களாகவே ஊராட்சி நிர்வாகம், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கான தண்ணீரினை சரியாக... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான்: இஸ்லாமுடன் முரண்படும் நூல்களுக்குத் தடை விதிக்கும் தாலிபன்கள்!

ஆப்கானிஸ்தானில் இறக்குமதி செய்யப்பட்ட புத்தகங்களை சோதனை செய்தல், தடை செய்யப்பட்ட தலைப்புகளின் கீழுள்ள புத்தகங்களை நூலகங்களிலிருந்து அகற்றுதல் மற்றும் அதன் விநியோகத்தை தடுத்தல் போன்ற இஸ்லாமுக்கு மாறான ... மேலும் பார்க்க

``சீமான் அறிவிக்கப்படாத எதிர்க்கட்சித் தலைவர்” - அதிமுகவை சீண்டும் NTK மணிசெந்தில்

``நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் விலகுவது தொடர்கதையாகிவிட்டதே... உங்கள் கட்சியில் என்ன பிரச்னை?” ``வளர்ந்துவரும் அரசியல் கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலகுவதும், இணைவதும் போன்ற சாதாரண நிகழ்வுகளை ... மேலும் பார்க்க

Tourism: சென்னை ஈ.சி.ஆரில் கப்பல் சவாரி; பார்ட்டி, DJ கொண்டாட்டம், உணவகம்... விலை சரியாக இருக்குமா?

மும்பை, ஹைதராபாத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மக்களின் பொழுதுபோக்கிற்காக கப்பல் சவாரி கொண்டுவரப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அப்படியான கப்பல் சவாரியைச் சென்னையிலும் கொண்டுவருவது என்பது நீண்... மேலும் பார்க்க