மேற்கு வங்கத்தில் 9 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது
What To Watch On OTT: குபேரா, டி.என்.ஏ, சட்டமும் நீதியும்! - இந்த வாரம் ஓடிடி-யில் என்ன பார்க்கலாம்?
இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள திரைப்படங்களின் பட்டியல்.
தி பூத்னி - ஜீ5:
(இந்தி)சித்தாந்த் சச்தேவ் இயக்கத்தில், நடிகர்கள் சஞ்சய் தத், சன்னி சிங், மௌனி ராய், பாலக் திவாரி ஆகியோர் நடிப்பில் கடந்த மே 1 ஆம் தேதி இந்தியில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தி பூத்னி. நகைச்சுவையும் ஹாரரும் கலந்த திரைப்படமாக வெளியாகிய இப்படம் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

குபேரா:
அமேசான் பிரைம் வீடியோசேகர் கம்முலா இயக்கத்தில், நடிகர்கள் நாகார்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், தலிப் தகில் ஆகியோர் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஜூன் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது குபேரா. கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் பணக்காரர்களின் வாழ்வையும், அன்றாடப் பிழைப்புக்காக யாசகம் பெறும் பிச்சைக்காரர்களின் வாழ்வியலையும் ஒரு சேர காண்பித்திருப்பார் இயக்குநர் சேகர் கம்முலா. இத்திரைப்படம் இன்று (ஜூலை 18) அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
சட்டமும் நீதியும்:
ஜீ5 - வெப் சீரிஸ்பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், சரவணன் மற்றும் நம்ரிதா எம்.வி. முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள சட்டமும் நீதியும் வெப் சீரிஸ் இன்று முதல் வெளியாகியுள்ளது. இந்தத் தொடர் ஒரு சாதாரண மனிதனின் நீதிக்கான துணிச்சலான போராட்டத்தைப் பற்றி பேசுகிறது.

இத்தொடர் ஒரு வழக்கறிஞரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அவரைச் சார்ந்தே அடுத்தடுத்த எபிசோடுகள் நகர்கின்றன. நீதி எல்லா உயிர்களுக்குமானது. எனவேதான் நீதியை நிலைநாட்டும் கருவியான சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை காட்டுவதாக இத்தொடர் உள்ளது.
இதை தாண்டி ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள்:
மனிதர்கள் (தமிழ்) - ஆஹா தமிழ், சன் நெக்ஸ்ட்
பைரவம் (தெலுங்கு) - ஜீ 5
டி.என்.ஏ (தமிழ்) - ஜியோ ஹாட்ஸ்டார்
சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் (தமிழ்) - அமேசான் ப்ரைம் வீடியோ

ஓடிடி-யில் வெளியாகியுள்ள சீரீஸ்கள்:
Untamed (இங்கிலீஷ்) - நெட்பிளிக்ஸ்
Special OPS (சீசன் 2 ,இந்தி) - ஜியோ ஹாட்ஸ்டார்