செய்திகள் :

ஃபென்ஜால் புயலின் தற்போதைய நிலை என்ன?

post image

ஃபென்ஜால் புயல் தற்போதைய நிலவரப்படி, கடந்த 6 மணி நேரமாக நகராமல் கடலூருக்கு வடக்கே 30 கிமீ தொலைவிலும், விழுப்புரத்துக்கு கிழக்கே 40 கிமீ நிலை கொண்டுள்ளது.

இப்புயல் மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்துக்குள் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழுக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எக்ஸ் தளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிதமான மழை பெய்துவருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... மருத்துவத்துக்கு மருத்துவம்! டிரம்ப் அதிரடி

வங்கக் கடலில் கடந்த நவ. 24-ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நவ.27-இல் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஃபென்ஜால் புயலாக வெள்ளிக்கிழமை வலுப்பெற்றது.

சனிக்கிழமை மாலை கரையைக் கடக்கத் தொடங்கிய பென்ஜால் புயல், புதுவை அருகே நள்ளிரவு கரையைக் கடந்ததாக கூறப்படும் நிலையில், புதுவை கடற்கரைக்கு வெளிப்புறப்பகுதியில், தொடர்ந்து 6 மணி நேரமாக புயலாக நிலை கொண்டுள்ளது.

3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

ஃபென்ஜால் புயல் எதிரொளியாக இன்று(டிச. 1) 3 மாவட்டங்களுக்கு அதி கனமழை பெய்வதற்கான சிவப்பு நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.அதன்படி, இன்று(டிச. 1) விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கட... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயல்: வெள்ளத்தில் மிதக்கும் புதுவை!

ஃபென்ஜால் புயலால் பெய்த கடுமையான மழையின் காரணமாக, புதுச்சேரி நகரம் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது மற்றும் வீதிகளில் நீர் முழங்கால் அளவிற்கு ... மேலும் பார்க்க

சேலத்தில் கனமழை: வாகனங்களின்றி வெறிச்சோடிய சாலைகள்!

சேலம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் இன்றி சாலை வெறிச்சோடி காணப்பட்டது.ஃபென்ஜால் புயல் காரணமாக சேலம் மா... மேலும் பார்க்க

ஆம்னி வேன் மோதி நடைப்பயிற்சி சென்ற 3 பேர் பலி!

நாமக்கல்: மோகனூரில் நடைப்பயிற்சி சென்றபோது, ஆம்னி வேன் மோதியதில், இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் பலியாகினர்.நாமக்கல் மாவட்டம், மோகனூர் அராக் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மலையண்ணன்(68). இவரது மனைவி, நிர்மல... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே ஒரு கோடு போடப்பட்டு, வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு, ஆண்... மேலும் பார்க்க

அவிநாசி: நடைபயிற்சி சென்ற கார் விற்பனையாளர் வெட்டிக் கொலை

அவிநாசி: அவிநாசியில் நடைபயிற்சி சென்றுக் கொண்டிருந்த கார் விற்பனையாளரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வேலாயுதம்பாளையம் ஊராட்... மேலும் பார்க்க