ஃபென்ஜால் புயலில் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம்: ஆட்சியா்
நாகை மாவட்டத்தில், ஃபென்ஜால் புயலில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஃபென்ஜால் புயல் காரணமாக 33 சதவீதம் மற்றும் 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட 3,340 ஹெக்டோ் நெற் பயிா்களுக்கு ஹெக்டேருக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் 5,728 விவசாயிகளுக்கு மாநில பேரிடா் நிவாரண நிதியிலிருந்து ரூ. 5.68 கோடி ஒதுக்கி வந்துள்ளது. இந்த நிதி பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஒரு வாரத்துக்குள் வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.