செய்திகள் :

ஃபென்ஜால் புயல்: 2229 நிவாரண முகாம்கள் தயார்!

post image

அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2229 நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது என்றும், இது 30.11.2024 அன்று பிற்பகல் காரைக்கால் மற்றும் மகாபலிபுரத்திற்கு இடையே மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் காற்றின் வேகத்துடன் கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்குமாறும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று (29.11.2024) காலை மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வருகை புரிந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். 

ரெட் அலர்ட்

இன்று (29.11.2024) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாருர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 20 செ.மீட்டருக்கு மேலாக அதிகனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 10 செ.மீட்டருக்கு மேலாக மிககனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவாரண முகாம்கள்

அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2229 நிவாரண மைய கட்டடங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. தற்போது திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 6 நிவாரண முகாம்களில், 164 குடும்பங்களைச் சேர்ந்த 471 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிக்க: இன்று 5 மாவட்டங்களுக்கும், நாளை சென்னைக்கும் ரெட் அலர்ட்!

மீட்புப் படை

முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்படி ஏற்கனவே நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இன்று (29.11.2024) செங்கல்பட்டு மாவட்டத்திற்கு  தேசிய பேரிடர் மீட்புப் படையின் 1 குழுவும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்களும், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் தலா 1 குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு தென்கிழக்கே 300 கிமீ தொலைவில் ஃபென்ஜால் புயல்!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 300 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டிருந்த புய... மேலும் பார்க்க

புஷ்பா - 2: புதிய பாடல் புரோமோ!

புஷ்பா 2: தி ரூல் படத்தின் புதிய பாடலின் முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா - 2 திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி உலகள... மேலும் பார்க்க

வங்கக்கடலில் உருவானது ஃபென்ஜால் புயல்!

தென்மேற்கு வங்கக்கடலில் ஃபென்ஜால் புயல் உருவாகியுள்ளது.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக நிலைக்கொண்டிருந்த புயல் சின்னம், இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஃபென்ஜால் புயல் உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம்... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயலை எதிா்கொள்ள 24 மணி நேரமும் தயாா்: மேயர் பிரியா

ஃபென்ஜால் புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.வார்டுக்கு 10 பேர் வீதம் 28 ஆயிரம் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் எனவும் மாந... மேலும் பார்க்க

கரை ஒதுங்கிய கப்பல் வழிகாட்டி மிதவை: அப்புறப்படுத்தும் கடலோர காவல்படை!

வட சென்னை கடற்கரையில் ஒதுங்கிய கப்பல் வழிகாட்டி மிதவை கருவியை கடலோர காவல்படையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்ஃபெங்கால் புயல் எதிரொளியாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. குறிப்பாக எண்ணூரிலிருந்து காசிமேடு ... மேலும் பார்க்க

விஜய்க்கு அரசியல் கை கொடுக்கும்: ஆனந்த் ராஜ் பேட்டி

நடிகர் விஜய் அரசியல் வருகைக்கு வாழ்த்துகள். அவர் நடிக்க வந்ததிலிருந்து வெற்றி தான், நிச்சயமாக அரசியல் அவருக்கு கை கொடுக்கும் என தஞ்சையில் நடிகர் ஆனந்த் ராஜ் தெரிவித்தார்.உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரி... மேலும் பார்க்க