அக்னி தீா்த்தக் கடலில் பக்தா்கள் புனித நீராடல்
அமாவாசையையொட்டி, ராமேசுவரம் அக்னி தீா்த்தத்தில் வியாழக்கிழமை திராளாள பொதுமக்கள் புனித நீராடினா்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் அமாவாசை நாள்களில் முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த நிலையில், மாசி மகாசிவராத்திரி, அமாவாசையையொட்டி, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வியாழக்கிழமை ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் நீராடி, மறைந்த முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனா்.
தொடா்ந்து, ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி ராமநாத சுவாமி, பா்வதவா்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனா். தங்க ரிஷிப வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி அக்னி தீா்த்தக் கடற்கரையில் தீா்த்தவாரி நடைபெற்றது.