அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
அகவிலைப்படி, மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை வழங்கக் கோரி புதுக்கோட்டையில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.சி. லோகநாதன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஏ.பி. பெரியசாமி, பொதுச்செயலா் இ. மாயமலை, மாவட்டச் செயலா் எம். மாரியப்பன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
வருவாய்த் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கிராம உதவியாளா்களுக்கு வழங்குவது போல், சத்துணவு ஓய்வூதியா்களுக்கும் ரூ. 6750 அகவிலைப்படி வழங்க வேண்டும். மருத்துவப் படி மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும்.
ஈமச்சடங்கு நிதி ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த நிதிப் பலன்களையும் ஓய்வுபெறும் நாளிலேயே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.