அசாம் சாலை விபத்தில் 8 பேர் பலி, 3 பேர் காயம்
கவுகாத்தி: அசாமின் பஜாலி மற்றும் துப்ரி மாவட்டங்களில் சனிக்கிழமை நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 8 பேர் பலியாகினர் மற்றும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் காயமடைந்த இருவரும் ஃபக்ருதீன் அலி அகமது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர்.
பஜாலி மாவட்டத்தில் துக்க நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பபானிபூர் அருகே லாரி மீது வேன்
மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணித்தவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் மற்றும் 2 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த இருவரும் ஃபக்ருதீன் அலி அகமது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பலியானவர்கள் ஆஷிஷ் ஹபீப் கான், மிசானூர் ரஹ்மான், ராயல் கான், மிசானூர் கான் மற்றும் மொய்னுல் ஹக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் அமீர் கான் மற்றும் காசி சக்ரா அகமது என்று போலீசார் தெரிவித்தனர்.
மற்றொரு விபத்தில் 3 பேர் பலி
மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரில் நடைபெற்றும் வரும் 'ராஸ்' கண்காட்சியை பார்ப்பதற்காக கௌரிபூரில் இருந்து வேனில் சென்று கொண்டிருந்தபோது துப்ரி மாவட்டம் அகோமோனி பகுதியில் உள்ள கரேஹாட் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பயணிகள் வேன் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், ஒருவர் படுகாயமடைந்தார்.
பலியானவர்கள் தஞ்சய் ராய், பிகாஸ் கலிதா மற்றும் ராம் ராய் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், காயமடைந்த கானிந்திரா ராய் தற்போது துப்ரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என போலீசார் தெரிவித்தனர்.