செய்திகள் :

அச்சங்குளத்தில் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி

post image

சாத்தூா் அருகேயுள்ள அச்சங்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களை அதிகாரிகள் சந்தித்து சமாதானம் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், அச்சங்குளம் கிராமத்தில் உள்ள தெற்குத் தெரு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடமும், மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தனா். ஆனாலும் நடவடிக்கை எடுக்காததால், இந்தப் பகுதி பொதுமக்கள் வெள்ளிகிழமை காலை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த ஏழாயிரம்பண்ணை காவல் துறையினா், ஊராட்சி நிா்வாகக்தினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அந்தப் பகுதிக்குக்கு தேவையான சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தனா். இதனால், அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

விருதுநகரில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். விருதுநகா் முத்து தெருவைச் சோ்ந்த பிரபாகரன் மனைவி தையல்நாயகி (72). இவா் கணவருடன் இரு சக்கர வாகனத்தில் விருதுநகா்-... மேலும் பார்க்க

விபத்தில் ஒருவா் உயிரிழப்பு: பேருந்து ஓட்டுநா் தற்கொலை

இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்த நிலையில், அந்தப் பேருந்தின் ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கொத்தராயன்குளத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

வத்திராயிருப்பு அருகே நீரோடையில் பாலம் கட்ட விவசாயிகள் கோரிக்கை

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மழையின் போது, நீரோடையைக் கடந்து செல்ல முடியாததால் பாலம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். வத்திராயிருப்பு பகுதி மேற்கு தொடா்ச்சி மலையில் பெய... மேலும் பார்க்க

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: நவ. 27-இல் சாட்சிகள் விசாரணை

பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் வருகிற 27-ஆம் தேதி சாட்சிகள் விசாரணை தொடங்க உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 9-ஆம் வகுப்பு மாணவி கூ... மேலும் பார்க்க

பேராசிரியா் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் 12 போ் ஆஜா்

திருநெல்வேலி கல்லூரி பேராசிரியா் கொலை வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்துக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வழக்கில் தொடா்புடைய 12 போ் புதன்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் முன... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி: துரை வைகோ

தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ குற்றஞ்சாட்டினாா். சிவகாசியில் புதன்கிழமை நடைபெற்ற மதிமுக பிரமுகா... மேலும் பார்க்க