செய்திகள் :

அஜித் படத்தை இயக்குகிறேனா? ஆதிக் பதில்!

post image

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்துடன் இணைவது குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுடன் வணிக ரீதியாகவும் ரூ. 250 கோடி வரை வசூலித்தது.

இதனைத் தொடர்ந்து, அஜித்தின் அடுத்தபடம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. ஏகே - 64 ஆக உருவாகும் இந்தப் படத்தின் இயக்குநர்களாக கார்த்திக் சுப்புராஜ், ஆதிக் ரவிச்சந்திரன் இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இன்று இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித்துடன் மீண்டும் இணைகிறீர்களா? எனக் கேட்கப்பட்டது.

அதற்கு ஆதிக், “ஆம். நடிகர் அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு அமைந்திருக்கிறது. குட் பேட் அக்லி படத்தைவிட வித்தியாசமான படமாக இது இருக்கும். படக்குழு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் - ஆதிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: ஆல்பம் பாடல்களில் கவனம் செலுத்தும் பிரபல தயாரிப்பு நிறுவனம்!

actor ajith kumar and director adhik ravichandran joins a next movie confirmed by adhik.

பராசக்தி வெளியீட்டில் மாற்றம்?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி, மதராஸி ஆகிய படங்களில் நட... மேலும் பார்க்க

எஸ்.ஜே. சூர்யாவின் கில்லர் முதல் போஸ்டர்!

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் கில்லர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழில் குஷி, வாலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக மட்டுமே... மேலும் பார்க்க

ஃபஹத் ஃபாசில் மட்டும்தான் நடிகரா? வெளியானது மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் டீசர்!

மோகன்லால் நாயகனாக நடித்துள்ள ஹிருதயப்பூர்வம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான், துடரும் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சத... மேலும் பார்க்க

ஜி.வி. பிரகாஷின் பிளாக்மெயில் டிரைலர்!

ஜி.வி. பிரகாஷ் நடித்த பிளாக்மெயில் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கடைசியாக தயாரித்து நடித்த கிங்ஸ்டன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இ... மேலும் பார்க்க

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரமின் பைசன்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரமின் பைசன் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.மாமன்னன், வாழை படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் கபடி விளையாட்டை மையமாக வைத்து பைசன் என்கி... மேலும் பார்க்க