முதல்வர் Stalin -க்கே இங்கிருந்து திராட்சை போகுது |4 மாதத்தில் 4 லட்சம் லாபம்
அஜித் படம் கைவிடப்பட்டது ஏன்? இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம்!
நடிகர் அஜித்குமார், லைகா தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக திட்டமிடப்பட்டு இருந்தது.
பின்னர் ஸ்கிரிப்ட் பிரச்னைகளால் இந்தப் படத்திலிருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் விலகுவதாக அறிவித்தார்.
இதற்கடுத்து அஜித் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் விக்னேஷ் சிவன் எல்ஐகே படத்தினையும் இயக்கி வருகிறார்.
இதையும் படிக்க:பாதிக்கப்பட்டுள்ளதால் ஆதரவு தெரிவித்தேன்..! தனுஷ் - நயன்தாரா பிரச்னை குறித்து பார்வதி விளக்கம்!
இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் அஜித் உடனான படம் கைவிடப்பட்டதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். அதில் விக்னேஷ் சிவன் கூறியதாவது:
என்னை அறிந்தால் படத்தின்போது அஜித் சாரை சந்தித்தேன். அப்போது என்னிடம் ‘நான் அதிகமான படங்களைப் பார்க்க மாட்டேன். ஆனால், நானும் ரௌடிதான் படத்தை பலமுறை பார்த்தேன். நீங்கள் படத்தினை எடுத்தவிதம் மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக பார்த்திபன் கதாபாத்திரம் மிகவும் பிடித்தது. அதுபோல் எதாவது ஸ்கிரிப்ட் எழுதுங்கள்’ என அஜித் கூறினார்.
இதையும் படிக்க: விஜய் பேசியதென்ன? அமரன் பட இயக்குநர் நெகிழ்ச்சி!
பின்னர் நானும் கதையை உருவாக்கினேன். அது தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை. நான் ஆவேஷம் படம் பார்த்தபோது இது நான் அஜித் சாருக்காக உருவாக்கப்பட்ட கதைக்களம் மாதிரி இருந்தது.
அஜித் படத்தின் தயாரிப்பாளர்கள் என்னுடைய கருத்து முற்றிலும் நேர் எதிராக இருக்கிறார்கள். என்ன இது காமிடியா இருக்கிறது? அது இல்லை, இது இல்லை என்றார்கள். அவர்கள் கணக்கு வேறு. அதனால் அந்தப் படம் கைவிடப்பட்டது என்றார்.