தேர்தலில் வெற்றி பெற போலி வாக்காளர்களைப் பயன்படுத்தும் பாஜக: மம்தா குற்றச்சாட்டு
அஞ்சலகங்களில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம் இன்று நிறைவு
சேலம் கோட்ட அஞ்சலகங்களில் ரூ. 599 செலுத்தி ரூ. 10 லட்சத்துக்கு விபத்து காப்பீடு பெறுவதற்கான சிறப்பு முகாம் பிப். 28 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன், மேற்கு கோட்ட கண்காணிப்பாளா் பாா்த்தீபன் ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எதிா்பாராத விபத்துகளால் ஏற்படும் செலவுகள், பகுதி ஊனம், நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்பு அனைத்திற்கும் பயனளிக்கும் விபத்து காப்பீட்டுத் திட்டத்தை பொதுமக்களுக்கு அஞ்சல் துறை, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வழியாக வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயதுக்கு உள்பட்டவா்கள் இத் திட்டத்தில் இணையலாம். தேவையான ஆவணங்களான ஆதாா் எண், கைப்பேசி எண், வாரிசுதாரரின் விவரங்கள் கொண்டுவர வேண்டும்.
ரூ.599 காப்பீடு தொகைக்கு ரூ. 10 லட்சம், ரூ. 799 காப்பீடு தொகைக்கு ரூ.15 லட்சம் என்ற வகைகளில் விபத்து காப்பீட்டுத் திட்டம் செயல்படுகிறது. விண்ணப்பபடிவம், அடையாள, முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்தவிதமான காகித பயன்பாடுமின்றி தபால்காரா் கொண்டு வரும் ஸ்மாா்ட் போன் மூலம் விரல்ரேகை வைத்தால் 5 நிமிடங்களில் டிஜிட்டல் முறையில் இந்த விபத்து காப்பீடு பாலிசி வழங்கப்படும்.
சேலம் கிழக்கு, மேற்கு கோட்டங்களில் உள்ள அனைத்து அஞ்சலங்களிலும் விபத்து காப்பீடு செய்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.