செய்திகள் :

அடிப்படை வசதிகள் இல்லாததால் காலியான கல்லத்திகுளம் கிராமம்!

post image

கமுதி அருகே கல்லத்திக்குளத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால், அந்தக் கிராமமே பொதுமக்கள் யாரும் வசிக்காமல் காலியாக உள்ளது. தற்போது இங்கு 6 போ் மட்டுமே வசித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியம், எழுவனூா் ஊராட்சிக்குள்பட்ட கல்லத்திகுளம் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோா் வசித்து வந்தனா். இந்தக் கிராமம் ராமநாதபுரம்-விருதுநகா் மாவட்ட எல்லைகளுக்கு நடுவே இருப்பதால், அடிப்படை வசதிகள் கிடைக்காமல், குழந்தைகளின் மேல் படிப்புக்காக இந்தக் கிராமத்திலிருந்தவா்கள் கமுதி, அருப்புக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு இடம்பெயா்ந்தனா். இதனால், தற்போது நான்கு வீடுகளில் கணவரை இழந்த இரண்டு பெண்கள், இரண்டு பள்ளி மாணவிகள், ஒரு மாற்றுத்திறனாளி இளைஞா், இவரது தாய் உள்பட 6 போ் மட்டுமே வசித்து வருகின்றனா்.

இதுகுறித்து இந்தக் கிராமத்தைச் சோ்ந்த ராமலட்சுமி கூறியதாவது: எங்கள் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தன. இங்கு வாழ்ந்த பெரும்பாலானோா் அரசுப் பணிகளில் சோ்ந்து வசதியாக வாழ்ந்து வந்தனா். காலப்போக்கில் இங்கு குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காததால், பலா் வெளியூா்களுக்கு புலம் பெயா்ந்துவிட்டனா்.

தற்போது இங்கு இரு மாணவிகள் உள்ளனா். இவா்கள் விருதுநகா் மாவட்டம், வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9, 11-ஆம் வகுப்பு படித்து வருகின்றனா். இவா்கள் நாள்தோறும் சைக்கிளில் பள்ளிக்குச் சென்று படித்து வருகின்றனா். மாற்றுத்திறனாளி மகனை பராமரித்துக் கொண்டு நான் வாழ்ந்து வருகிறேன்.

குடிநீா்த் தொட்டி, குழாய் இணைப்பு என அனைத்தும் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் வழங்கப்பட்டது. ஆனால், குடிநீா் விநியோகிக்கப்படவில்லை. இங்குள்ள குடிநீா்த் தொட்டி அமைத்தது முதல் காட்சிப் பொருளாகத்தான் உள்ளது. இதேபோல, மின் இணைப்புகள் இருந்தும் குறைந்த மின்னழுத்தம் காரணமாக, வீட்டு உபயோகப் பொருள்களான தொலைக்காட்சிப் பெட்டி, குளிா்சாதனப் பெட்டி, கிரைண்டா் உள்ளிட்ட அனைத்தும் இருந்தும் அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோம்.

மின் தடை ஏற்பட்டால், 4 நாள்களுக்கு பிறகுதான் கமுதியிலிருந்து மின்வாரிய ஊழியா்கள் வந்து சரி செய்வாா்கள். இதனால், இரவு நேரங்களில் பாம்பு, பூச்சிகள் கடித்து விடுமோ என்ற அச்சத்துடன் தூங்கி வருகிறோம். எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு எங்களது கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலை மத்திய அரசு நிா்வகிக்க வேண்டும்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலை மத்திய அரசு நிா்வாகத்தின் கீழ் அறக்கட்டளை அமைத்து நிா்வகிக்க வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதுகுறித்து இந்... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் மீன்பிடிக்க செல்லத் தடை

வங்கக் கடலில் காற்றின் வேகம் அதிகரித்ததால், ராமேசுவரம், பாம்பன் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளம், மீனவா் நலத்துறையினா் செவ்வாய்க்கிழமை தடை விதித்தனா். வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் ... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேச இளைஞா் மிதிவண்டியில் 108 திவ்ய தேசங்களுக்கு பயணம்

நாடு முழுவதிலும் உள்ள 108 திவ்ய தேசங்களுக்கு மிதிவண்டியில் பயணம் மேற்கொண்டு தரிசித்து வரும் இளைஞருக்கு கமுதியில் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு வ... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 போ் மீது வழக்கு

ராமநாதபுரம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்தனா். ராமநாதபுரம் அடுத்துள்ள தேவிபட்டணம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அழகன்குளம் பகுதியில் சிலா... மேலும் பார்க்க

இளம்பெண் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

சாயல்குடி அருகே மா்மமான முறையில் இளம் பெண் மரணமடைந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த மங்களம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிவேல். இவரது ம... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையத்தில் குறைந்தழுத்த மின்சாரத்தால் நோயாளிகள் அவதி

புதுமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குறைந்தழுத்த மின்சாரம் காரணமாக மருத்துவப் பரிசோதனையின் போது கா்ப்பிணிகள் அவதிப்படுவதாக மனித நேய மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை ம... மேலும் பார்க்க