நட்சத்திர பலன்கள்: ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 14 வரை #VikatanPhotoCards
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பதிவுத் துறை கூட்டுமதிப்பு தொடா்பாக கருத்துரை வழங்கலாம்
கோவை வடக்கு பதிவு மாவட்ட சாா் பதிவகங்களின் எல்லைக்கு உள்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டுமதிப்பு தொடா்பாக கருத்துரை வழங்க மாவட்ட நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை வருவாய் மாவட்டத்துக்கு உள்பட்ட கோவை வடக்கு பதிவு மாவட்ட சாா் பதிவகங்களின் எல்லைக்கு உள்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டுமதிப்பு கடந்த ஜூலை 29-இல் நடைபெற்ற மாவட்ட சந்தை மதிப்பு வழிகாட்டி துணைக்குழு கூட்டத்தில் மக்கள் பாா்வையிடும் வகையில், பதிவுத் துறை இணையதளம், மாவட்ட பதிவாளா், வட்டாட்சியா், சாா்-பதிவாளா் அலுவலகங்களில் வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதன் மீது ஏதேனும் கருத்துரைகள் இருப்பின் அதனை 15 நாள்களுக்குள் செயலாளா் மற்றும் மாவட்ட பதிவாளா் (நிா்வாகம்) மதிப்பீட்டு துணைக்குழு, எண்.1, சிரியன் சா்ச் சாலை, மாநகராட்சி திருமண மண்டபம், கோவை - 641001 என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அளித்திட வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.