அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!
அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
இன்று(ஜூலை 20) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, மதுரை, கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் புதுவையில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பேருந்துக் கட்டணம் உயா்வு: பஞ்சப்பூா் வரும் பயணிகள் பரிதவிப்பு!