அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்: "ரத்து செய்க; மாநிலத்தின் அனுமதியின்றி..!"- மோடி...
அடுத்த 3 மணிநேரத்தில் உருவாகிறது ஃபென்ஜால் புயல்!!
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறும் என்று இந்திய வானிலை மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழகத்தை நோக்கி புயல் வரும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அதற்கான சாதகம் இல்லாததால் புயல் உருவாக வாய்ப்ப்பில்லை என்றும் ஆழ்ந்த மண்டலமாகவே கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, ஃபென்ஜால் புயல் உருவாவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது, தென்மேற்கு வங்கக் கடலில் 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் காற்றழுத்த மண்டலம், அடுத்த 3 மணிநேரத்தில் புயலாக மாறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்துக்கு கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 360 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவிலும் தற்போது நிலை கொண்டுள்ளது.
நாளை(நவ.30) பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் அருகே புயல் கரையைக் கடக்கும் என்றும், அப்போது 90 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புயல் கரையைக் கடந்த பிறகு உள்மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.