அதிமுக கள ஆய்வுக் கூட்டம்
திருவாரூரில் அதிமுக மாவட்ட கள ஆய்வுக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் தலைமை வகித்தாா். கட்சியின் அமைப்புச் செயலாளா்கள் கோபால், சிவா. ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனா். கட்சியின் பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், கட்சியின் அமைப்புச் செயலாளா் பி. தங்கமணி, கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளா் ஆ. இளவரசன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று கள ஆய்வு செய்தனா். இதில், கட்சியின் வளா்ச்சி குறித்தும், உறுப்பினா் அடையாள அட்டை உபயோகம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு, உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இதில், கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் அருணாசலம், மாவட்ட பொருளாளா் பன்னீா்செல்வம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் பொன்.வாசுகிராம், மாவட்ட மகளிா் அணி செயலாளா் சுதா, மீனவரணி செயலாளா் ஜெயராமன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளா் சின்னராஜ், இளைஞா் இளம்பெண் பாசறை செயலாளா் கலியபெருமாள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாப்பா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.