செய்திகள் :

``அதிரடி அரசியல்வாதி; வெளிப்படையாக பேசக் கூடியவர்'' -ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை நினைவுகூறும் தொண்டர்கள்!

post image

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ-வுமான ஈவிகேஎஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில், இன்று (சனிக்கிழமை) உயிரிழந்தார். அதிரடி அரசியலுக்குப் பெயர் போன ஈவிகேஎஸ்.இளங்கோவன் தமிழ்ச் சமூகத்தில் புரட்சியை ஏற்படுத்திய தந்தை பெரியாரின் பேரன் ஆவார். ஈவிகேஎஸ்.இளங்கோவனின் தந்தை சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்ட திராவிட இயக்க முன்னோடியான ஈ.வி.கே.சம்பத். தாய் சுலோச்சனா சம்பத் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்.

1948-ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி பிறந்த ஈவிகேஎஸ். ஆரம்பக் கல்வியை ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்திலும், பின்னர் கல்லூரிப் படிப்பை ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியிலும் ஈவிகேஎஸ் இளங்கோவன் படித்தார். தொடர்ந்து, சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றதுடன், கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாணவரணி காங்கிரஸ் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். அதன் பின்னர் ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஈரோடு நகர காங்கிரஸ் தலைவர், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றிய இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலப் பொதுச் செயலாளர், 2000-ம் ஆண்டு முதல் 2002-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு, காங்கிரஸ் தலைவர், 2003 ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராக பதவி வகித்தார். மீண்டும் 2-ஆவது முறையாக 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பதவி வகித்தார்.

1984-ஆம் ஆண்டு முதன் முதலில் சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, 1989 -ஆம் ஆண்டு பவானிசாகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். 1996-இல் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் இளங்கோவன்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்வாட் வரி ரத்து

2004-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன், மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சராகவும் பதவியேற்றார்.

மத்திய ஜவுளி துறையின் இணை அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் ஜவுளி ரகங்களுக்கு சென்வாட் வரி விதிக்கப்பட்டது. ஜவுளி வியாபாரிகளுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்திய சென்வாட் வரியை ரத்துசெய்து முற்றிலுமாக நீக்கினார் இளங்கோவன்.

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ

2009, 2014, 2019 -இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தொடர் தோல்வியைச் சந்தித்தார். இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ-வான தனது மூத்த மகன் திருமகன் ஈவேரா மரணமடைந்ததை அடுத்து, 39 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப் பேரவைத் தேர்தலில் களமிறங்கினார் இளங்கோவன். அந்த இடைத் தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் - தமாகா இணைப்பு

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் நம்மிடம் இளங்கோவன் குறித்து பேசுகையில், "மூப்பனார் காலத்தில் தமிழக காங்கிரஸ் இரண்டாக பிளவுற்று மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் தனியே செயல்பட்டு வந்தது. மூப்பனார் மறைவுக்குப் பின் அவரது மகன் வாசன் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

வாசனுடன் சுமுகமாகப் பேச்சு வார்த்தை நடத்தி காங்கிரஸ் கட்சியுடன் தமாகா-வை இணைப்பதில் பெரும் பங்கு ஈவிகேஎஸ் இளங்கேவன் வகித்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக வாசன் அணியில் இடம் பெற்றிருந்த ஞானதேசிகனுக்கு, தான் வகித்து வந்த மாநிலத் தலைவர் பதவியை விட்டுக் கொடுத்து, காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவராக இ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதவி வகித்தார்.எந்த காலத்திலும் சுயநலமின்றி கட்சியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வந்தவர் இளங்கோவன்.

அதிரடி அரசியல்வாதி

மனதில் பட்ட விஷயத்தை யாருக்கும் அஞ்சாமல் நேரடியாகப் பேசக் கூடியவர். 2015-இல் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்திருந்தார். அப்போது அதிமுகவு-க்கும் பாஜகவு-க்கும் இடையே கள்ள உறவு நீடிப்பதாக இளங்கோவன் கருத்து தெரிவித்திருந்தார். இதைக் கண்டித்து தமிழக முழுவதும் அதிமுகவினர் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களில் ஈடுபட்டு இளங்கோவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், இறுதிவரை மன்னிப்பு கேட்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.

2009-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது சோனியா காந்தியை ஈரோட்டுக்கு அழைத்து வந்து பிரச்சார பொதுக் கூட்டம் நடத்தினார். அந்த அளவு கட்சித் தலைமையுடன் நெருக்கமாகவும் இருந்தார்" என்றனர்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஒரே தொகுதியில் தந்தையும்.. மகனும்..

2021 தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட இளங்கோவனின் மூத்த மகனான திருமகன் ஈவெரா, ஈரோடு நகரில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பிரச்னையாக உள்ள 40 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தார். அதற்கான முன்னெடுப்புகளை எடுத்த நிலையில், திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அதன் பின் நடைபெற்ற இடைத் தேர்தலில் மகன் போட்டியிட்ட ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இளங்கோவன், அடுத்த சில மாதங்களிலே மகன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வாங்கிக் கொடுத்தார். அதிரடி அரசியல்வாதியாக கருதப்பட்டாலும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடையே மிக எளிமையாகப் பழகும் இளங்கோவனின் மறைவு அக்கட்சித் தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

South Korea: ராணுவ ஆட்சியை அறிவித்த தென் கொரியா அதிபர் பதவி நீக்கம்..!

கிட்டதட்ட 10 நாள்களுக்கு முன்பு, தென் கொரியா அதிபர் யூன் சுக் இயோல், "எதிர்க்கட்சிகள் வட கொரியாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது மற்றும் அரசை அதன் கடமையை செய்யவிடாமல் தடுக்கிறது. இதனால், தென் கொரியாவில் ராண... மேலும் பார்க்க

EVKS Elangovan: ``எதற்கும் பயப்படமாட்டார்; ஒருமுறை அவரது வீட்டில் தாக்குதல்..." - வைகோ பேச்சு

இன்று காலை காலமான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உடல் அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஈ.வி.கே... மேலும் பார்க்க

EVKS Elangovan: ``உனக்கும் எனக்கும் போன ஜென்மத்து பந்தம்...'' - நினைவுகளை பகிர்ந்த குஷ்பூ

சென்னை மணப்பாக்கத்தில் இருக்கும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியப் பிறகு, நடிகை மற்றும் அரசியல்வாதி குஷ்பூ பேசியதாவது,"ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நல்ல ... மேலும் பார்க்க

EVKS Elangovan: தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் உடல்; நாளை இறுதி சடங்கு!

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ-வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (75) உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். ஏற்கெனவே இதய பாதிப்பிற்காக சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு, நுரையீரல்... மேலும் பார்க்க

EVKS Elangovan: ``மகனை இழந்ததில் உடைந்த போயிருந்தார்; எனினும்..'' - ஸ்டாலின் இரங்கல் அறிக்கை

இன்று காலை உயிரிழந்துள்ள காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கள் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர்... மேலும் பார்க்க

`நேற்று மகாராஷ்டிரா.. இன்று டெல்லி..' ஒவ்வொரு தேர்தலுக்கும் அதிகரிக்கும் உரிமைத் தொகை!

மாகயுதி கூட்டணி வெற்றி...சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 234 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது, என்.டி.ஏ கூட்டணி. தேர்தல் முடிவில் பா.ஜ.க 132, ஏக்ந... மேலும் பார்க்க