பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 5,87,352 வீடுகள் வழங்கல்
அனுமதியற்ற சாயப் பட்டறைகளை அகற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
பள்ளிபாளையத்தில் சட்ட விரோத சாயப் பட்டறைகளை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
பள்ளிபாளையம் பகுதியில் சில சாயப் பட்டறைகள் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல் அரசின் அனுமதி பெற்று செயல்படுகிறது. துணி மற்றும் நூலை பிளீச்சிங் அனுமதியைப் பெற்று, சாயமிடும் பணியை அந்த ஆலைகள் செய்து வருகின்றன. சாயக் கழிவுகளை முறைகேடாக வெளியேற்றிய பல ஆலைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
சீல் வைக்கப்பட்ட பல சாயப்பட்டறைகள், முறைகேடாக வேறு பெயரில் உள்ள மின் இணைப்புகளில் இருந்து மின்சாரத்தை பெற்று இயங்கி வருகின்றன. இதுபோன்ற சட்டவிரோத சாயப்பட்டறைகளை அகற்ற வலியுறுத்தி பள்ளிபாளையம், வசந்த நகரில் கொங்கு விடுதலைப்புலிகள் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பொதுச்செயலாளா் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட் டத்தில், பசுபதியாா் தனிப்படை அமைப்பின் மாவட்டச் செயலாளா் பாஸ், லோக் ஜனசக்தி கட்சியின் மாநில பொதுச் செயலாளா் ஆதவன், திராவிடா் விடுதலை கழகம் முத்துபாண்டி, ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, காவிரி நீா் மாசுபடுத்தும் சாயப்பட்டறைகளை அகற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
சாய ஆலைகள் வெளியேற்றும் கழிவுநீரால் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பதை உணா்த்தும் வகையில் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.