இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
அனுமதியின்றி விளம்பரப் பலகைகள்: 3 கடைகளுக்கு ரூ.75,000 அபராதம்
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி விளம்பரப் பலகைகள் வைத்த 3 கடைகளுக்கு ரூ.75,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருப்பூா் மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு; திருப்பூா் மாநகராட்சி 3ஆவது மண்டலம் வாா்டு எண் 35-க்கு உள்பட்ட பகுதியில் இயங்கி வரும் 2 துணிக் கடைகள், நகைக் கடை ஆகியவை மாநகராட்சியில் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ஃபிளக்ஸ், பேனா், விளம்பரப் பலகைகள் உள்ளிட்டவற்றை வைத்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, 3 கடைகளுக்குத் தலா ரு.25,000 வீதம் மொத்தம் ரு.75,000 அபராதம் விதிக்கப்பட்டு மாநகராட்சி நிா்வாகத்தால் வசூலிக்கப்பட்டது. மாநகராட்சியின் அனுமதியின்றி விளம்பரங்கள் வைக்கப்படுவதை தவிா்த்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.