செய்திகள் :

`அனைத்து தனியார் சொத்துகளையும் பொதுநலன் பெயரில் அரசு கையகப்படுத்த முடியாது' - உச்ச நீதிமன்றம் அதிரடி

post image

Qமகாராஷ்டிரா மாநில அரசு கடந்த 1986-ல், மகாராஷ்டிரா வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டுச் சட்டம் (MHADA) 1976-ல் ஒரு திருத்தும் ஒன்றை மேற்கொண்டிருந்தது. அந்த திருத்தமானது, சில குறிப்பிட்ட தனியார் சொத்துகளை சீரமைப்புக்காக அரசு கையகப்படுத்துவது பற்றியது. இதற்கு முன், 1978-ல் கர்நாடக மாநில அரசுக்கும் ரங்கநாத ரெட்டிக்குமான வழக்கில் நீதிபதி கிருஷ்ண ஐயர், அரசியலமைப்புச் சட்டம் `39 பி'-ன்படி சமூகத்தின் பொருள் வளங்களானது (material resources of the community) இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட, பொது மற்றும் தனியாருக்குச் சொந்தமான அனைத்து வளங்களையும் உள்ளடக்கியது என்று தீர்ப்பளித்திருந்தார்.

சொத்துகள்

அதேபோல, 1982-ல் சஞ்சீவ் கோக் உற்பத்தி நிறுவனத்திற்கு எதிரான பாரத் சமையல் நிலக்கரி லிமிடெட் வழக்கில், 1978-ல் நீதிபதி கிருஷ்ண ஐயர் வழங்கிய தீர்ப்பை நீதிமன்ற அமர்வு உறுதிசெய்தது. அதனடிப்படையில், அரசியலமைப்புச் சட்டம் 39 பி-ஐ நடைமுறைப்படுத்தும் வகையில் மகாராஷ்டிர அரசு இந்தத் திருத்தத்தை மேற்கொண்டது. இதனை எதிர்த்து 1991-ல் மும்பையிலுள்ள சொத்து உரிமையாளர்கள் சங்கம் மாநில நீதிமன்றத்துக்குச் சென்றது.

ஆனால், அவர்களின் மனு அங்கு தள்ளுபடி செய்யப்படவே, 1992-ல் உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். இன்னும் பிற தரப்பிலிருந்தும் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் குவிந்தன. பின்னர், இந்த மனுக்கள் அனைத்தும் ஒன்றாக்கப்பட்டு 2002-ல் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பல வருடங்களாக நிலுவையிலிருந்த இந்த வழக்கை இந்தாண்டு ஏப்ரலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கத் தொடங்கியது.

உச்ச நீதிமன்றம்

இந்த நீதிமன்ற அமர்வில், தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், பி.வி. நாகரத்னா, சுதன்ஷு துலியா, ஜே.பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா, ராஜேஷ் பிண்டல், எஸ்.சி.சர்மா, ஏ.ஜி.மசிஹ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். வழக்கு விசாரணைகள் முடிந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்ற அமர்வு இதில் தீர்ப்பளித்திருக்கிறது. இதில், பெரும்பான்மையாக சந்திரசூட் உட்பட 7 நீதிபதிகள் ஒருமித்தமாக, பொதுநலனுக்காக என்றாலும் அனைத்து தனியார் சொத்துகளையும் அரசு கையகப்படுத்த முடியாது என்று தீர்ப்பளித்திருக்கின்றனர்.

தீர்ப்பை வாசித்த சந்திரசூட், ``பிரிவு 39 பி-ல் குறிப்பிடப்பட்டுள்ள சமூகத்தின் பொருள் வளங்களில் தனியருக்குச் சொந்தமான வளங்களும் வருமா என்பதே இந்த அமர்வின் முன் வைக்கப்படும் நேரடியான கேள்வி. எழுத்துப்பூர்வமாக, இதற்கு ஆம் என்பதே பதில். இருப்பினும், நீதிபதி கிருஷ்ண ஐயர் தீர்ப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பார்வையை இந்த நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு தனிநபருக்குச் சொந்தமான ஒவ்வொரு வளமும் சமூகத்தின் பொருள் வளமாகக் கருதப்பட முடியாது. ஏனெனில் அது 'பொருள் தேவைகள்' என்ற தகுதியைப் பூர்த்தி செய்கிறது." என்று கூறினார்.

நீதிபதி சந்திரசூட்

நீதிபதி பி.வி. நாகரத்னா தனது தனித்த தீர்ப்பில், ``நீதிபதி கிருஷ்ண ஐயர் ஒரு சமூகத்தின் பொருள் வளங்களை அரசியலமைப்பு மற்றும் பொருளாதார கட்டமைப்பின் பின்னணியில் தீர்ப்பளித்தார். இது மாநிலத்துக்குப் பரந்த அளவில் முதன்மையானது. எனவே, இது தொடர்பாகத் தலைமை நீதிபதியின் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை." என்று குறிப்பிட்டார். இவைகளிலிருந்து மாறுபட்ட தீர்ப்பை அளித்த நீதிபதி சுதன்ஷு துலியா, ``வருமானம் மற்றும் செல்வத்தில் சமத்துவமின்மை, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே வளர்ந்து வரும் இடைவெளி இன்னும் அதிகமாக இருக்கிறது. எனவே, ரங்கநாத ரெட்டி, சஞ்சீவ் கோக் வழக்குகளின் தீர்ப்பின் அடிப்படையில் 38 மற்றும் 39-வது பிரிவுகளின் கொள்கைகளைக் கைவிடுவது விவேகமானதாக இருக்காது." என்று தெரிவித்தார்.

Wayanad bypoll result: 5 லட்சம் வாக்குகளை கடந்த பிரியங்கா, வசமாகும் வயநாடு!

வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கிய பிரியங்கா காந்தி முதல் சுற்றிலேய முன்ன... மேலும் பார்க்க

`ரஜினியின் அழைப்பு... போயஸ் கார்டனில் சீமான்.!’ - சந்திப்பின் பின்னணி

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாக விமர்சித்துவரும் சூழலில் நடிகர் ரஜினியை சீமான் சந்தித்திருப்பதுதான் தமிழ்நாடு அரசியலில் டிரெண்டிங். ரஜினி - சீமான் சந்திப்பு பின்னணிய... மேலும் பார்க்க

'ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா வைக்க ரூ.20,000 கோடிக்கு டெண்டரா?' - ரயில்வே அமைச்சகம் சொல்வதென்ன?

ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கு இந்திய ரயில்வே 20,000 கோடி ரூபாய்க்கு டெண்டர் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. `சிசிடிவி கேமரா பொருத்த 20,000 கோடியா...' என இது தொடர்பாகப் பல்வே... மேலும் பார்க்க

`சம்பாதிக்கும் பணமெல்லாம் குடிநீர் வாங்கவே செலவாகிறது' - க.தர்மத்துப்பட்டி கிராம மக்கள் வேதனை

திண்டுக்கல் மாவட்டம், க.தர்மத்துப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. சில வருடங்களாகவே ஊராட்சி நிர்வாகம், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கான தண்ணீரினை சரியாக... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான்: இஸ்லாமுடன் முரண்படும் நூல்களுக்குத் தடை விதிக்கும் தாலிபன்கள்!

ஆப்கானிஸ்தானில் இறக்குமதி செய்யப்பட்ட புத்தகங்களை சோதனை செய்தல், தடை செய்யப்பட்ட தலைப்புகளின் கீழுள்ள புத்தகங்களை நூலகங்களிலிருந்து அகற்றுதல் மற்றும் அதன் விநியோகத்தை தடுத்தல் போன்ற இஸ்லாமுக்கு மாறான ... மேலும் பார்க்க

``சீமான் அறிவிக்கப்படாத எதிர்க்கட்சித் தலைவர்” - அதிமுகவை சீண்டும் NTK மணிசெந்தில்

``நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் விலகுவது தொடர்கதையாகிவிட்டதே... உங்கள் கட்சியில் என்ன பிரச்னை?” ``வளர்ந்துவரும் அரசியல் கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலகுவதும், இணைவதும் போன்ற சாதாரண நிகழ்வுகளை ... மேலும் பார்க்க