செய்திகள் :

`அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் மனம் படைத்தவர்' - EVKS-க்கு இரங்கல் தெரிவிக்கும் அரசியல்வாதிகள்

post image
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.-வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (75) உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவிதிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், "உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூத்த தலைவர் திரு.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து குஷ்பு, "ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் இறப்புச் செய்தியை கேட்டு மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். காங்கிரஸில் இருந்த போது அவரின் தலைமையிலும் கீழும் வழிகாட்டலின் கீழும் பணியாற்றியிருக்கிறேன். அவர் துணிச்சலும் நெஞ்சுரமும் மிக்கவர். ஈகோ இல்லாத பரந்த மனதோடு அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் மனம் படைத்தவர்" என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல கார்த்தி சிதம்பரம் இரங்கல் கடிதம் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், "தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சார்ந்த திரு. EVKS இளங்கோவன் அவர்கள் தமிழக காங்கிரஸ் தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நம் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து நம் இயக்க வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர்.

மனதில் பட்டதை வெளிப்படையாக அடிமட்ட தொண்டரின் மனம் கவரும் வண்ணம் பேசும் தன்மை உள்ளவர். அவரின் இழப்பு நம் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் பேரிழப்பே. அன்னாரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நம் இயக்க நன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன் அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன்" என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

EVKS: பெரியாரின் பேரன் டு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் - இளங்கோவனின் அரசியல் பயணம் ஒரு பார்வை!

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ-வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (75) உடல்நலக்குறைவால் காலமானார்.அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்ப... மேலும் பார்க்க

நாளை பதவியேற்பு; அமைச்சர்கள் இலாகா தொடர்பாக மகா., முதல்வர் பட்னாவிஸை இரவில் சந்தித்து பேசிய ஷிண்டே!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு புதிய முதல்வர் பதவியேற்பு மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது. புதிய முதல்வர் கடந்த 5-ம் தேதி பதவியேற்று 10 நாள்கள் ஆகிவிட்ட ந... மேலும் பார்க்க

EVKS Elangovan: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமானார்!

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.-வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (75) உடல்நலக்குறைவால் காலமானார்ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த... மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு: `ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணி' - கேரள அரசிடம் ரூ.132 கோடி கேட்கும் மத்திய அரசு!

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் சூரல்மல, முண்டக்கை பகுதிகளில் கடந்த ஜூலை மாதம் இறுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். பலர் காயமடைந்தனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீ... மேலும் பார்க்க