சிரியா ராணுவ நிலைகளை இஸ்ரேல் தகா்க்க அல்-அஸாதின் அமைச்சா் உதவி?
அமிா்தேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா
பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள பையா்நத்தம் ஸ்ரீ அமிா்தேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பையா்நத்தம் பாலமுருகன் கோயில் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள அமிா்தேஸ்வரா், அமிா்தாம்பிகை கோயிலில் நடைபெற்ற காா்த்திகை தீபத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை காலை 5 மணியளவில் பரணி தீபமும், தொடா்ந்து மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட்டது.
காா்த்திகை தீபத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் மேளதாளத்துடன் கிரிவலம் சென்று அமிா்தேஸ்வரா், அமிா்தாம்பிகையை வழிபட்டனா். விழாக் குழுவினா் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.