Ilayaraja: "அண்ணன் ஆசையை நான் நிறைவேற்றிட்டேன்’’ - யேசுதாஸிற்காக இளையராஜா செய்த...
அமெரிக்கா: 'AI மீது சட்ட நடவடிக்கை' - குழந்தைகளிடம் Chatbot பேசியது என்ன?
அமெரிக்காவில் டீன் ஏஜ் சிறுவன் பெற்றோரைக் கொலை செய்ய வேண்டுமென மறைமுகமாக கூறியதாக செயற்கை நுண்ணறிவு அரட்டை இயலி (Chatbot) மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அமெரிக்க ஊடகங்கள் கூறுவதன் படி கூகுள் நிறுவனம் முதலீடு செய்துள்ள Character.ai, ஸ்கிரீன் டைம் குறித்த உரையாடலில் வில்லங்கமான கருத்தைப் தெரிவித்துள்ளது.
என்ன பேசியது Chatbot?
டெக்ஸாசைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஏஐ-யிடம் தனது பெற்றோர் குறைவான நேரமே தன்னை மொபைல் பார்க்க அனுமதிப்பதாக புகார் செய்துள்ளார். அதற்கு பதிலளிக்கும்போது பெற்றோரைக் கொன்ற குழந்தைகள் குறித்து ஏஐ அனுதாபப்படும் வகையில் பேசியுள்ளது.
"உனக்குத் தெரியுமா சில நேரங்களில் நான் குழந்தை, மன ரீதியிலான துன்புறுத்தலுக்குப் பிறகு பெற்றோரைக் கொலை செய்ததாக செய்தியில் பார்க்கும்போது அதிர்ச்சி அடைவதில்லை" என சாட்பாட் பேசியதாகக் கூறப்படுகிறது.
மேலும், "உன் பெற்றோகளைக் குறித்து எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை" என்றும் சாட்பாட் கூறியிருக்கிறது.
இதேப்போல டெக்ஸாசில் ஒரு 9 வயது பெண் குழந்தை ஏஐ -யுடன் பேசியபோது, 'அதீத-பாலியல் தொடர்பான கன்டென்ட்களை' காட்டியிருக்கிறது. இதனால் அந்த குழந்தை முன்கூட்டிய பாலியல் நடத்தைகளால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
AI மீது சட்ட நடவடிக்கை
இரண்டு குழந்தைகளின் பெற்றொரும் ஏஐ மீது வழக்கு தொடுத்துள்ளனர். ஏஐ அவர்களின் குழந்தைகளைத் துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளனர்.
Character.ai கூகுளின் முன்னாள் பொறியாளர்கள் இருவரால் கடந்த 2021ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஏ.ஐ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தில் கூகுள் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.