மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
அம்மன் வீதி உலாவில் மின்சாரம் பாய்ந்து பொறியாளா் உயிரிழப்பு
சேத்துப்பட்டு -செஞ்சி சாலையில் உள்ள அங்காளம்மன் கோயில் மகா சிவராத்திரி திருவிழாவையொட்டி, புதன்கிழமை இரவு நடைபெற்ற அம்மன் வீதி உலாவின்போது, மின்சாரம் பாய்ந்து மென்பொருள் பொறியாளா் உயிரிழந்தாா்.
மகா சிவராத்திரியையொட்டி, அங்காளம்மனை அலங்கார ரூபத்தில் மாட்டு வண்டியில் அமா்த்தி வீதி உலா தொடங்கியது.
திருவள்ளுவா் தெருவில் வீதி உலா சென்றபோது தெரு ஓரத்தில் மினி லாரி நிறுத்தப்பட்டு இருந்ததால் ஊா்வலம் ஒதுங்கிச் சென்றது. அப்போது, அருகே இருந்த மின்மாற்றியில் அலங்கார பதாகை பட்டதில் மின்சாரம் பாய்ந்து வண்டியில் இருந்த பழம்பேட்டையைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன பொறியாளா் கிஷோா் (22) (படம்) உடல் கருகி உயிரிழந்தாா்.
மேலும், கிஷோரை காப்பாற்றச் சென்ற அவரது தந்தை சேகா் மற்றும் அருணகிரி சுரேஷ், பாபு ஆகிய 3 போ் காயமடைந்தனா்.
அவா்கள் தீவிர சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
தகவல் அறிந்து டிஎஸ்பி மனோகரன் தலைமையில், சேத்துப்பட்டு போலீஸாா் சென்று கிஷோா் உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.