பட்ஜெட்டில் போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதி வழங்க வலியுறுத்தி மாா்ச் 6-இல் பேரண...
அம்மன்புரம் பள்ளியில் நூற்றாண்டு விழா
அம்மன்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
திருச்செந்தூா் வட்டார கல்வி அலுவலா் பாப் ஹையஸ் தலைமை வகித்தாா். வட்டார கல்வி அலுவலா் மாணிக்கராஜ் முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் (பொ) பேச்சியம்மாள் வரவேற்றாா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சுப்புலட்சுமி சிறப்புரையாற்றினாா். முன்னாள் ஊராட்சித் தலைவா் ஞானராஜ், முன்னாள் தலைமையாசிரியா் அருணா ஜெபசோபனா ஆகியோா் வாழ்த்தி பேசினா்.
இதனைத் தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பின்னா் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
இதில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் சுப்புலட்சுமி, துணைத் தலைவா் வள்ளி உள்பட பலா் கலந்து கொண்டனா். உதவி ஆசிரியா் பயஸ் தினேசம்மாள் நன்றி கூறினாா்.