செய்திகள் :

அம்மா உணவகங்களில் இன்று உணவு இலவசம்! முதல்வர் உத்தரவு

post image

புயல் மற்றும் கனமழையால் அம்மா உணவகங்களில் இன்று உணவு இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்கிழமை (நவ. 30) இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை(டிச.1) புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சென்னை புறநகர் மற்றும் அனைத்து பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களில் இன்று(நவ.30) முழுவதும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக, ஃபென்ஜால் புயல் மழை பாதிப்பு தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அங்கு இருந்தபடியே மழை முன்னேற்பாடுகள் பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து தேவையான உதவிகளை செய்ய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

எழிலகம் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி மழை பாதித்த மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

100 கி.மீ. தொலைவில் ஃபெங்ஜால் புயல்: இன்று மாலை கரையைக் கடக்கிறது

சென்னையிலிருந்து 100 கி.மீ. தொலைவில் ஃபெங்ஜால் புயல் நிலைகொண்டிருக்கிறது. இன்று மாலை கரையைக் கடக்கிறது மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் ஏன்?: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

மதுரை அரிட்டாப்பட்டி சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒருபுறம் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி விட்டு, இன்ன... மேலும் பார்க்க

உதயநிதி பிறந்தநாள் விழாவில் தள்ளுமுள்ளு: இலவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்

பென்னாகரம்: பென்னாகரத்தில் நடைபெற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில், இலவச சேலை, பெட்ஷீட், உணவு வழங்கும்போது அதனை பெறுவதற்காக மக்கள் மேடையை நோக்கி முந்தியடித்துக் கொண்டு சென்றதால் க... மேலும் பார்க்க

மக்களே வெளியே வராதீங்க: 7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இதுதொர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்..தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் புயல் வடமேற... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்க ஏலத்துக்கு தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவித்தது!

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் உள்ளிட்ட கனிமவளங்களை எடுப்பதற்கான மத்திய அரசின் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.2023 ஆம் ஆண்டு அக்டோபரில் டங்ஸ்டன் உள்ளிட்ட முக்கியமா... மேலும் பார்க்க

சென்னையில் இயல்பைவிட 12% கூடுதலாக பெய்த வடகிழக்கு பருவமழை!

சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 12% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவான... மேலும் பார்க்க